175 இடங்களில் களம் காணும் உதயசூரியன்.. 234 தொகுதிகளிலும் நம்முடைய தொகுதியாக பணியாற்றுவோம்.. முதல்வர் ஸ்டாலின்
Tamilnadu assembly eletion: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களைப் பரப்ப முயற்சி செய்கிறார்கள். வதந்திகளை உடன்பிறப்புகள் கண்டு கொள்ளாமல் புறக்கணித்து, தோழமைக் கட்சியினருடன் இணைந்து களத்தில் பணியாற்றி, வெற்றியை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்
Tamil Nadu Polls: 2026 சட்டமன்றத் தேர்தலில் 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது என்றும், 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள் எனப் பணியாற்றுவோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்காக தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு, கட்சியின் சார்பில் விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணலையும் நிறைவு செய்துவிட்டு, அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
இதையும் படிக்க: திமுக அமைச்சர்களுக்கு எதிராக நேரடி போட்டியை தவிர்த்த அதிமுக… என்ன காரணம்!
தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நிறைவு:
நமது கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ள காரணத்தால், உரிய அளவில் தொகுதிகளைப் பங்கீடு கொள்ள வேண்டிய சூழலும் தேவையும் இருப்பதாக நம்பியுடன் தொடர்ந்து பயணிக்கும் தோழமைக் கட்சிகளான விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களின் தலைவர்களிடமும் ஆலோசித்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளன.
சகோதரனாக உத்தரவாதம் வழங்கினேன்:
கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தோழமைக் கட்சிகளை நம்பியிருக்க மாட்டார் என்று பார்க்கிறேன். அவர்களுக்கான தொகுதிகளில் முழுமையான வெற்றியை உறுதி செய்ய அவர்களின் சகோதரனாக என் உத்தரவாதத்தையும் வழங்கியிருக்கிறேன். திமுக கூட்டணியின் வெற்றியே பெரிது என்பதை எடுத்துரைத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் தனது மனம் திறந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையை மனதார வரவேற்கிறேன். அதேபோலவே விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களும் மதிப்புடன் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், 2019 முதல் தொடர்ந்திடும் நமது கூட்டணியின் வலிமைக்குச் சான்றாகும்.
விமர்சனங்களை புறக்கணியுங்கள்:
🔹 தோழமைக் கட்சிகளின் விருப்பத்தையும், புதிய கட்சிகள் நம் கூட்டணியில் இணைந்துள்ள சூழலையும் உணர்ந்து ஜனநாயகப்பூர்வமாகத் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளோம்!
🔹 தோழமை இயக்கங்களுக்கு நான் அளித்துள்ள வெற்றி உத்தரவாதத்தை நிறைவேற்ற உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் உறுதிபூண்டுள்ளதை… pic.twitter.com/W24sz1jTM9
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 25, 2026
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் மதவாத அரசியலைத் துணிவுடன் எதிர்த்து நிற்கும் திமுகவுக்குத் தேர்தல் மதச்சார்பின்மை, மாநில உரிமை, சமூக நீதி, சமத்துவம் இவற்றை அடித் தளமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணி நம்முடையது. இதில் ஏதாவதொரு விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா, தி.மு.க கூட்டணியின் வெற்றியைத் தடுக்க வழி ஏற்படாதா என நினைத்த எதிர்தரப்பினரின் எண்ணங்கள் தவிடுபொடியானதால், திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களைப் பரப்ப முயற்சி செய்கிறார்கள். வதந்திகளை உடன்பிறப்புகள் கண்டு கொள்ளாமல் புறக்கணித்து, தோழமைக் கட்சியினருடன் இணைந்து களத்தில் பணியாற்றி, வெற்றியை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
175 இடங்களில் உதயசூரியன்:
தமிழ்நாட்டு மக்களிடமும் திமுக தலைமையிலான கூட்டணிக்குப் பெரும் செல்வாக்கு இருக்கிறது. நம்பிக்கையும், செல்வாக்கும் வெற்றியாக விளைவதற்கு நாம் அடுத்த 4 வாரங்களும் அயராமல் உழைத்திட வேண்டும். தங்களது சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சிகளின் தொகுதிகள் போக, திமுக வேட்பாளர்கள் மற்றும் திமுக சின்னத்தில் போட்டியிடும் தோழமை கட்சி வேட்பாளர்களுமாக இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது.
இதையும் படிக்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..
உதயசூரியன் நமது சின்னம். அதேபோல் கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவை நமது சின்னங்கள்தான். 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான். எல்லார்க்கும் எல்லாம் என்கிற ஆட்சி தொடர்ந்திடவும், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடவும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கான வெற்றிக் களத்தில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நின்று, விரைந்து பணியாற்றுவீர். கவனம் சிதறாது இலக்கை வெல்வோம். இவ்வாறு அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.