தமிழகம் முழுவதும் வீடு வீடாக ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி இன்று முதல் தொடக்கம்..
Tamilnadu Assembly Election: இந்த ‘பூத் சிலிப்புகள்’ வழங்கும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. பி.எல்.ஓ. அலுவலர்கள் வீடுவீடாக சென்று இவற்றை வழங்குவார்கள். அவர்கள் தனித்தனியாகச் சென்று இந்த ‘பூத் சிலிப்புகளை’ வாக்காளர்களுக்கு வழங்கலாம். உதவிக்காக அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்களை அழைத்துச் செல்லலாம்.

கோப்புப் புகைப்பட்ம
Tamilnadu Polls 2026: தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி இன்று தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக 75 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் துணை வாக்குச்சாவடிகளும் அடங்கும்.
இதையும் படிக்க: ஒரு புறம் மநீம தலைவர் கமல்ஹாசன்… மறுபுறம் பாமக நிறுவனர் ராமதாஸ்.. சூறாவளி பிரசாரம் பயண திட்டம்!
தேர்தல் பணியில் 75,000 பேர்:
ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள் என்று விகிதத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் 75 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு தற்போது ஒரு வாக்குச்சாவடிக்கு சராசரியாக 756 வாக்காளர்கள் என்ற விகிதாசாரம் அமைந்துள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு ‘பி.எல்.ஓ.’ அலுவலர் என்ற வகையில் 75 ஆயிரத்து 64 பேர் பணியில் உள்ளனர்.
புதிய ‘பூத் சிலிப்’ தயார்:
தற்போது வாக்காளர்களுக்கு அடையாள சீட்டுகளை (பூத் சிலிப்) வழங்க பி.எல்.ஓ. அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த தேர்தலுக்காக புதிய வகை அடையாளச் சீட்டுகள் அச்சிடப்பட்டு உள்ளன. அதில் அவர்களின் பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடி எண்ணை எளிதில் அடையாளம் காணும் வகையில் கட்டம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இந்த ‘பூத் சிலிப்பில்’ ‘கியூ ஆர் கோடும்’ உள்ளது. இதன்மூலம் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
‘பூத் சிலிப்’ விநியோகம் தொடக்கம்:
இந்த ‘பூத் சிலிப்புகள்’ வழங்கும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. பி.எல்.ஓ. அலுவலர்கள் வீடுவீடாக சென்று இவற்றை வழங்குவார்கள். அவர்கள் தனித்தனியாகச் சென்று இந்த ‘பூத் சிலிப்புகளை’ வாக்காளர்களுக்கு வழங்கலாம். உதவிக்காக அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்களை அழைத்துச் செல்லலாம். வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள 5.73 கோடி வாக்காளர்களுக்கும் ‘பூத் சிலிப்புகளை’ பி.எல்.ஓ. அலுவலர்கள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: தேர்தலுக்கு பின் திமுக சிதறும்.. “கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்”.. புயலை கிளப்பிய அண்ணாமலை!!
பூத் சிலிப் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள்:
வாக்குச்சாவடி அலுவலர்கள் பூத் சிலிப் விநியோகம் செய்ய வரும்போது, வீட்டில் வாக்காளர்கள் இல்லையெனில், அருகில் உள்ள வீடுகளில் தங்களுக்கான பூத் சிலிப்புகள் வழங்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் என்பது தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதாகும். இதன் மூலம் வாக்காளர்கள் தங்களது வாக்கு சாவடியை எளிதாக கண்டறியவும், வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை சரி பார்க்கவும் உதவுகிறது. இந்த பூத் சிலிப் வாக்கு மையங்கள், வாக்காளர்கள் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தப்படுவதாகும். முன்னதாக, சென்னை மாவட்டம் முழுவதும் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு ஏப்.10 முதல் நேரடியாக சென்று பூத் சிலிப்புகள் விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.