தவெகவுடன் கூட்டணிக்கு வந்த கட்சி… அரசியல் களத்தில் திடீர் திருப்பம்.. முழு விவரம் உள்ளே!

Puducherry Tvl Allaince: புதுச்சேரி மாநிலத்தில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைய இருந்த நிலையில், நேயம் மக்கள் கட்சியுடன், தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைத்துள்ளது. அந்தக் கட்சிக்கு 2 சட்டமன்ற தொகுதிகளை தவெக தலைமை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

தவெகவுடன் கூட்டணிக்கு வந்த கட்சி... அரசியல் களத்தில் திடீர் திருப்பம்.. முழு விவரம் உள்ளே!

தவெக நேயம் மக்கள் கட்சி கூட்டணி உறுதி

Updated On: 

23 Mar 2026 13:27 PM

 IST

புதுச்சேரியில் ஏப்ரல் 9- ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. இதற்காக, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அவசர அவசரமாக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் நேர்காணல் என முடிக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தாங்கள் போட்டியிடக்கூடிய தொகுதிகளுக்கு வேட்பு மனுக்களை சமர்ப்பித்து வருகின்றனர். அதேபோல, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடக்கூடிய 30 வேட்பாளர்களை கட்சியின் தலைவர் விஜய் தேர்வு செய்து நேற்று ஞாயிற்றுக்கிழமை ( மார்ச் 22) இரவு அறிவித்திருந்தார். அதன்படி, இந்த வாக்காளர்கள் தங்களுக்கான வேட்பு மனுக்களை மாநில தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம்- நேயம் மக்கள் கட்சி கூட்டணி

இந்த நிலையில், புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதில், புதுச்சேரியை சேர்ந்த நேயம் மக்கள் கட்சியுடன், தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை மற்றும் கொள்கையை ஏற்று நேயம் மக்கள் கட்சியின் தலைவரும், உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சுயேட்சை எம்எல்ஏவுமான நேரு என்ற குப்புசாமி கூட்டணி அமைக்க முன் வந்தார். இதற்காக அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்தை சந்தித்து பேச்சவார்த்தை நடத்தி இருந்தார். இதில், இரு கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டது.

மேலும் படிக்க: நேற்று ஆதங்கத்தை கொட்டிய சரத்குமார்.. இன்று நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு.. பாஜகவில் முக்கிய பொறுப்பு?

தவெக-நேயம் மக்கள் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கீடு

அதன் அடிப்படையில், இந்த இரு கட்சிகளுக்கான கூட்டணி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேயம் மக்கள் கட்சிக்கு உருளையன் பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒப்புதலோடு பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ளார். இதனிடையே, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டிருந்தது.

தவெக அரசியல் வரலாற்றி முதல் கூட்டணி

அதில், தவெக சார்பில் உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மரிய பிரான்சிஸ் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் எம். பன்னீர்செல்வம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், இந்த 2 சட்டமன்ற தொகுதிகள் நேயம் மக்கள் கட்சிக்கு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் களத்தில் முதல் முறையாக கூட்டணி அமைந்துள்ளது. தவெக தலைமையை ஏற்று கூட்டணிக்கு வந்த முதல் கட்சி நேயம் மக்கள் கட்சி ஆகும்.

மேலும் படிக்க: Assembly Election 2026: வேட்பாளர் இறந்தால் தேர்தல் ரத்து ஆகுமா? முழு விளக்கம்

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..