Tamil Nadu Ministers List: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யாருக்கு என்ன துறை? உத்தேச பட்டியல்..
தமிழக வெற்றி கழகத்திற்கு 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், நேற்று ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு விஜய்க்கு தமிழ்நாடு ஆளுநர் முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. மேலும், மே 13ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, மே 10, 2026: தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனாலும், ஆட்சி அமைக்க முடியாத சூழல் நீடித்தது. தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 118 இடங்கள் தேவை. ஆனால், தமிழக வெற்றி கழகத்திடம் 108 இடங்கள் மட்டுமே இருந்த சூழலில், பிற கட்சிகளின் ஆதரவை கோரி கடிதம் எழுதப்பட்டது.
பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த தவெக:
அதில், 22 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி அதிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது. இதன் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது. மேலும் ஆறு இடங்கள் தேவைப்பட்ட சூழலில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்திருந்த இடதுசாரி கட்சிகளான சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக அறிவித்திருந்தன.
மேலும் படிக்க: பெரும்பான்மையை நிரூபித்தல் என்றால் என்ன? சட்டமன்றத்தில் அது எப்படி நடக்கும்?
மே 13 ஆம் தேதிக்குள் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும்:
இந்த வகையில், தமிழக வெற்றி கழகத்திற்கு 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், நேற்று ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு விஜய்க்கு தமிழ்நாடு ஆளுநர் முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. மேலும், மே 13ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பொது இடங்களில் LED திரைகள்.. தயார் நிலையில் கான்வாய்.. விஜய் பதவியேற்பு சிறப்பு ஏற்பாடுகள் விவரம்!
9 அமைச்சர்கள் பதவியேற்பு:
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயுடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதில் முக்கியமாக ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இவர்களுக்கான துறைகள் குறித்து உத்தேசப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
- அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் – மின்சாரத்துறை
- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா – விளையாட்டு மற்றும் மதுவிலக்கு துறை
- அமைச்சர் ராஜமோகன் – ஆதிதிராவிடர் நலத்துறை
- அமைச்சர் அருண்ராஜ் – பத்திரப்பதிவு மற்றும் வணிகவரி துறை
- அமைச்சர் செங்கோட்டையன் – பொதுப்பணித்துறை
- அமைச்சர் ஆனந்த் – நகராட்சி நிர்வாகத்துறை
- அமைச்சர் வெங்கட்ரமணன் – பள்ளிக்கல்வித்துறை