திருப்பூரில் ரூ. 295 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கும் முதல்வர் ஸ்டாலின்.. பொள்ளாச்சியில் திட்டம் என்ன?

CM MK Stalin Tiruppur Visit: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகஸ்ட் 11, 2025 தேதியான இன்று திருப்பூரில் ரூ.295 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்குகிறார். பின்னர் பொள்ளாச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு மக்களை சந்திக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

திருப்பூரில் ரூ. 295 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கும் முதல்வர் ஸ்டாலின்.. பொள்ளாச்சியில் திட்டம் என்ன?

கோப்பு புகைப்படம்

Updated On: 

11 Aug 2025 07:45 AM

 IST

திருப்பூர், ஆகஸ்ட் 11,2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருப்பூரில் பல்வேறு நலத்திட்ட பணிகளை ஆகஸ்ட் 11 2025 தேதி அன்று தொடங்கி வைக்கிறார். இதற்காக ஆகஸ்ட் 10 2025 தேதியான நேற்று சென்னையில் இருந்து கோவை சென்றார். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் இலவச வீட்டு மனை பட்டாக்கள், கலைஞரின் கனவு இல்லம் ஆணைகள், மகளிர் திட்டம், தோட்டக்கலை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 19 ஆயிரத்து 785 பேருக்கு ரூபாய் 295 கோடி 29 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

அதேபோல் பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் புதிதாக அமைக்க இருக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனைத் தொடர்ந்து அங்க இருக்கக்கூடிய பொது மக்களிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

மேலும் படிக்க: கிருஷ்ணகிரியில் மக்களை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி.. 3 ஆம் கட்ட பிரச்சார பயணத்திட்டம் என்ன?

முதலமைச்சர் கள ஆய்வு:

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டு சாலை வலம் சென்று மக்களை சந்தித்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அந்த வகையில் சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியட்நாம் நாட்டை சேர்ந்த கார் தொழிற்சாலையை தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு.. பா.ம.க மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்..

கோவை – திருப்பூரில் பயணத்திட்டம் என்ன?


அதனைத் தொடர்ந்து இரண்டு நாள் பயணமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு முதல் அமைச்சர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்று அதாவது ஆகஸ்ட் 10, 2025 தேதி ஆன நேற்று உடுமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். திருப்பூரில் அரசு நிகழ்ச்சி முடித்துக் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடுமலையில் இருந்து கார் மூலம் கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.

அங்கு காமராஜர், சுப்பிரமணியன் மற்றும் மகாலிங்கம் ஆகிய தலைவர்களின் திருவுருவ சிலையை திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து வி.கே பழனிசாமி அரங்கத்தினை திறந்து வைத்து ஆழியாறு பாசனத்த பணிகள் தொடர்பான புகைப்பட கண்காட்சி மற்றும் திட்டத்தின் மாதிரி வடிவத்தை பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து மாலை கோவை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு மீண்டும் திரும்புகிறார்.