AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Chepauk-Triplicane Election Result: சேப்பாக்கம் கோட்டையைத் தக்கவைத்தார் உதயநிதி: தவெக வேட்பாளரை வீழ்த்தி மீண்டும் அபார வெற்றி!

Chepauk-Triplicane Election 2026: தமிழகத்தின் இதயப்பகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இந்த முறை நட்சத்திரப் போட்டி நிலவுகிறது. ஆளும் திமுக சார்பில் தற்போதைய அமைச்சரும், கட்சியின் இளவரசருமான உதயநிதி ஸ்டாலின் மீண்டும் களம் காண்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் இங்கு நிலவும் அரசியல் சூழல் மற்றும் வேட்பாளர்களின் பலப்பரீட்சை என்ன என்பதை காணலாம்...

Chepauk-Triplicane Election Result: சேப்பாக்கம் கோட்டையைத் தக்கவைத்தார் உதயநிதி: தவெக வேட்பாளரை வீழ்த்தி மீண்டும் அபார வெற்றி!
சேப்பாக்கம் தேர்தல் முடிவுகள்
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 04 May 2026 18:28 PM IST

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தலைநகர் சென்னையின் நட்சத்திர தொகுதியாகக் கருதப்படும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆரம்பம் முதலே தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தார். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அவர் முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக வேட்பாளர் செல்வத்திற்கு பின்னடைவு

இந்தத் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினுக்குப் பலத்த போட்டியைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் டி. செல்வம், இறுதிக்கட்டத்தில் தோல்வியைத் தழுவினார். 13 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையின் இறுதியில், உதயநிதி ஸ்டாலின் 51,543 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். அவரை எதிர்த்து களம் கண்ட தவெக வேட்பாளர் செல்வம் 41,662 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். இதன் மூலம் 9,881 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி வாகை சூடியுள்ளார்.

திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் தவெக கட்சி பல இடங்களில் முன்னிலை வகித்து ஒரு புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ள இந்த வெற்றி அக்கட்சியினருக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றியை ஒட்டி சேப்பாக்கம் தொகுதி முழுவதும் திமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

தேர்தல் முடிவுகளின் தற்போதைய நிலவரம்

தமிழகத்தின் ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. எனினும், சேப்பாக்கம் போன்ற முக்கிய தொகுதிகளில் திமுக தனது செல்வாக்கை நிலைநாட்டியுள்ளது. மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை இன்னும் சில இடங்களில் இறுதிக்கட்டத்தை எட்டி வருவதால், இறுதி நிலவரம் குறித்து இன்னும் சில மணி நேரங்களில் முழுமையான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதி மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள்

பரபரப்பான வர்த்தக மையங்கள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த இத்தொகுதியில் பல சவால்கள் உள்ளன:

குடியிருப்பு பட்டாக்கள்: திருவல்லிக்கேணி பகுதியில் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு முறையான பட்டா வழங்குவதில் நிலவும் சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.

போக்குவரத்து நெரிசல்: குறுகலான சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிட வசதி இல்லாதது பெரிய வணிகப் பகுதிகளில் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

மழைநீர் வடிகால்: குறைந்த மழையிலேயே சாலைகளில் நீர் தேங்கும் சூழல் இருப்பதால், நவீன வடிகால் வசதிகள் மக்கள் நீண்டகாலமாகக் கோரி வருகின்றனர்.

மீனவர் நலன்: மெரினாவை ஒட்டியுள்ள மீனவக் கிராம மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளும் இங்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன.

 

Follow Us