Tamil Nadu Election 2026 Highlghts: நாளை விஜய் பிரச்சாரம் செய்யவிருக்கும் இடங்கள் – வெளியான தகவல்
Tamil Nadu Election 2026 Highlights: தமிழகத்தைப் பொறுத்தவரையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரைக்காக மீண்டும் ஏப்ரல் 20 அன்று தமிழகம் வருகை தரவிருக்கிறார். சென்னையின் வில்லிவாக்கம், அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 20 அன்று தலைவர் விஜய் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் விவாகரத்து வழக்கு ஏப்ரல் 20 அன்று விசாரணைக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது. இதில் அவர் நேரில் ஆஜராவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
LIVE NEWS & UPDATES
-
நாளை விஜய் பிரசாரம்
தென் சென்னை பகுதிகளில் தவெக தலைவர் விஜய் ஏப்ரல் 21, 2026 அன்று விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மேலும், சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விஜய் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், நந்தனம் YMCA மைதானத்தில் நாளை பிற்பகல் தவெக மாநில செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ஏப்ரல் 21, 2026 நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுக் கூடங்களையும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
10% வாக்குகளை கூட வாங்க முடியாது – திருமாவளவன் கணிப்பு
த.வெ.க தலைவர் விஜய்யால் 10 சதவீதம் வாக்குகளை கூட வாங்க முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவை வீழ்த்துவதே விஜயின் நோக்கமே தவிர, முதலமைச்சர் ஆகவேண்டும் என நினைக்க வில்லை என்றும் தெரிவித்தார்.
-
ரஜினிகாந்த்தை சந்தித்த திமுக வேட்பாளர்
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலன் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். தொகுதியில் நடைபெற்ற பணிகள் தொடர்பான தொகுப்பை ரஜினிகாந்திடம் அளித்து உரையாடியதாக எழிலன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுக வேட்பாளர் எழிலனின் எக்ஸ் பதிவு
ஆயிரம் விளக்கு தொகுதியில்
Super star சந்திப்பு…
தொகுதியில் நடைபெற்ற பணிகள் தொகுப்பு அவரிடம் அளித்து உரையாடினோம்
‘Man of simplicity’ pic.twitter.com/caiaLiTDJ7— Ezhilan (@Dr_Ezhilan) April 20, 2026
-
திமுகவின் சூழ்ச்சி – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுடன் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுகவைபோல் பாமகவை பிளவுபடுத்த விஷமிகள் முயன்றனர். திமுகவின் சூழ்ச்சிகளை அன்புமணி முறியடித்துவிட்டார். திமுகவால் அதிமுக, பாமகவை வீழ்த்த முடியாது என்றார்.
-
அரசியல் வேறு நடிப்பு வேறு – அண்ணாமலை விமர்சனம்
சென்னையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார் அப்போது பேசிய அவர், புதிய தலைமுறை வாக்காளர்களே, படத்திற்கு சென்றோமா, பார்த்தோமா, கை தட்டினோமா என்று இருக்க வேண்டும். அரசியல் வேறு நடிப்பு வேறு. அரசியல் என்றால் வண்டி மீது அமர்ந்து கொண்டு கை அசைப்பது அல்ல. களத்தில் வந்து நேர்மையோடு போராட வேண்டும் என்று பேசினார்.
-
தமிழ் மக்கள் அனைத்திலும் வல்லுநர்களாக உள்ளனர் – சந்திரபாபு நாயுடு
தேன்கனிக்கோட்டையில் தே.ஜ. கூட்டணிக்கு ஆதரவாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ் மக்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வல்லுநர்களாக உள்ளனர்
தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்கள்போல் வேறு எங்கும் இல்லை. என்.டி.ராமராவ் சென்னையில்தான் படித்து திரைத் துறையில் சாதித்தார் என்றார். -
பெண்களுக்கு எதிரான துரோகம் – சந்திரபாபு நாயுடு விமர்சனம்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழ்நாடு வந்துள்ளார். அப்போது பேசிய அவர், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பு எடுத்துள்ள நிலைப்பாடு பெண்களுக்கு எதிரான துரோகம். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே என்று பேசினார்.
-
அரவிந்த் கெஜ்ரிவால் – முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை செய்ய சென்னை வந்துள்ள டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
-
வில்லிவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற விஜய்!
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் விஜய் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
-
பணத்துக்கு அணி மாறியவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் – ராமதாஸ் வேண்டுகோள்
பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 18 தொகுதி வேட்பாளர்கள் நான் வளர்த்தவர்கள்தான். பணத்துக்கு அணி மாறியவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். மருத்துவமனையில் இருந்த போது ‘எப்படி இருக்க அப்பா?’ என்று கூட அன்புமணி கேட்கவில்லை. நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அன்புமணி தரப்பு வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் தனது கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
-
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு வைக்கப்பட்டுள்ளது. திமுக எம்.பி. கிரிராஜன் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் வழக்குப்பதிய அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக் கோரி எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, வழக்கு, எஸ்.பி.வேலுமண், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
முக்கிய ஆலோசனை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில் திமுக பாக முகவர்கள் 75,000 பேருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஏப்ரல் 20, 2026 இன்று மதியம் ஆலோசனை நடத்தினார்.
-
திமுகவுக்கு ஆதரவு
தமிழர் தேசிய முன்னணி நிறுவனர் பழ.நெடுமாறன், தமிழ் பண்பாடு, நாகரிகத்தை பாதுகாக்க பாஜக கூட்டணியின் போலி வேடத்தை பொதுமக்கள் புரிந்து கொண்டு திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய் மீது முறைகேடு புகார்
பெரம்பூரைச் சேர்ந்த வாக்காளர் விக்னேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், விஜய் தனது வேட்புமனுக்களில் ரூ.100 கோடி அளவுக்கு சொத்தை குறைத்துக் காட்டி முறைகேடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து வருமான வரித்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அன்புமணி மீது கடும் விமர்சனம்
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தேர்தல் பரப்புரையின்போது பேசிய அவர், நேரடியாக களத்தில் மக்களை சந்திக்க அஞ்சி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் மனைவியை தேர்தலில் நிறுத்தி, பின்னணியில் இருந்து கொண்டு அதிகாரத்தை தேடுகிறார் என அன்புமணி மீது விமர்சனத்தை வைத்துள்ளார்.
-
இருசக்கர வாகன பேரணி
பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இன்று மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. இதில், இருசக்கர வாகனங்களில் பதாகைகள் ஏந்தியும், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த பேரணி நடைபெற்றது.
-
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
-
உரிமை உள்ளதாக நம்புகிறோம் – ராகுல்
இந்தியாவில் உள்ள இரு சித்தாந்தங்களுக்கு இடையே போராட்டமாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு மாநிலமும் தங்களை தானே ஆண்டு கொள்ள வேண்டும் என்ற உரிமை உள்ளதாக நம்புகிறோம் – ராகுல்
-
அடிபணிய வேண்டும் என்று பாஜக நினைக்கிறது – ராகுல்காந்தி
பாரதிய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களும் தங்களது சித்தாந்தத்துக்கு அடிபணிய வேண்டும் என்று நினைக்கிறது – ராகுல்காந்தி
-
தமிழ் நாகரிகம் தொன்மையானது – ராகுல்
ஒவ்வொரு மொழியும் வருங்காலத்துக்கான கனவுகளை தாங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். தமிழ் நாகரிகம் என்பது புதிய நாகரிகம் அல்ல. உலகின் மிக மிக தொன்மையான நாகரீகம் ஆகும் – ராகுல்காந்தி
-
ராகுல்காந்தி பிரசாரம்
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்று திங்கள்கிழமை (ஏப்ரல் 20) பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
1950- என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்
சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருப்பது கட்டாயமாகும். இது தொடர்பான வேறு ஏதேனும் சந்தேகங்களுக்கு 1950- என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்
-
இந்த ஆவணங்களை பயன்படுத்தலாம்
வாக்காளர் அட்டைக்கு பதிலாக இந்த ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம்.
- ஆதார் அடையாள அட்டை.
- ரேஷன் அட்டை.
- எம். என். ஆர். இ. ஜி. ஏ. அடையாள அட்டை.
- வங்கி அல்லது அஞ்சல் அலுவலக கணக்கு புத்தகம்.
- மருத்துவ காப்பீட்டு அட்டை.
- ஓட்டுனர் உரிமம்.
- பான் கார்டு.
- பாஸ்போர்ட்.
- ஓய்வூதிய அடையாள அட்டை.
- ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பப்ளிக் செட்டார் யூனிட் அடையாள அட்டை.
- எம். பி. மற்றும் எம். எல். ஏ. அடையாள அட்டை.
- மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை.
-
12 வகையான அடையாள ஆவணங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இன்றி அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய 12 வகையான அடையாள ஆவணங்களை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்திக் கொள்ளலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் – ஸ்டாலின்
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 48 மணிநேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் – ஸ்டாலின்
-
என்னை முடக்கியுள்ளனர் – செல்வப்பெருந்தகை
வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை குறித்து பேசிய செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதால், நான் கன்னியாகுமரிக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் வருமான வரித்துறையினர் என்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் இருக்குமாறு முடக்கி வைத்துள்ளனர் ” என தெரிவித்துள்ளார்
-
செல்வப்பெருந்தகை வீட்டில் வருமானவரித்துறை
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை – திடீர் சோதனைக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
-
திமுக கூட்டணி சிதறியுள்ளது – அண்ணாமலை
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள். தேங்காய் சிதறியது போல திமுக கூட்டணி சிதறியுள்ளது – அண்ணாமலை
-
ராகுல் காந்தியை ஸ்டாலின் சந்திக்கவில்லை – அண்ணாமலை
தமிழகத்தில் பாஜக வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தை தவிர மு. க. ஸ்டாலினுக்கு ஆதரவாக ராகுல் காந்தி உள்ளிட்ட யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தியை, மு க ஸ்டாலின் சந்திக்கவில்லை – அண்ணாமலை
-
ராகுல் காந்தியின் தமிழக வருகை – அண்ணாமலை விமர்சனம்
ராகுல் காந்தியின் தமிழக வருகை.. ஸ்டாலினுக்காக அல்ல.. பாஜகவுக்காக என அண்ணாமலை பேசியுள்ளார்
-
திமுகவை விமர்சனம் செய்வதுதான் வழக்கம்
புதிதாக அரசியல் கட்சி தொடங்குபவர்கள் திமுகவை விமர்சனம் செய்வதுதான் வழக்கமாக உள்ளது என்று தவெக குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்
-
நாம்தான் வெல்வோம் – ஸ்டாலின்
கருத்துக்கணிப்புகள், மக்கள் கணிப்புகள் என எதை எடுத்தாலும் நாம்தான் வெல்வோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
-
கோடீஸ்வர வேட்பாளர்கள் லிஸ்ட்
திராவிட முன்னேற்றக் கழகத்தில் – 170 பேர், அதிமுகவில் 160 பேர், தமிழக வெற்றி கழகத்தில் 156 பேர், காங்கிரஸ் கட்சியில் 27 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இதில், ரூ.10 லட்சத்துக்கு கீழ் சொத்து வைத்துள்ளவர்கள் 1371 பேரும், ரூ.10 லட்சம் முதல் 50 லட்சம் வரை 1,204 பேரும், ரூ. 50 லட்சம் முதல் 2 கோடி வரை 716 பேரும், ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை 286 பேரும், ரூ.5 கோடிக்கு மேல் 415 பெரும் சொத்து வைத்துள்ளனர். தேசிய கட்சிகளில் 61 பேர், மாநில கட்சிகளில் 435 பேர், பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 304 பேர், சுயேச்சை வேட்பாளர்களின் 181 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
-
பணக்கார வேட்பாளர்கள்
7. ராஜேந்திரன் ( திமுக) – சொத்து மதிப்பு ரூ.259 கோடி. ( திருவள்ளூர் தொகுதி).
8. கே. ஆர். ஜெயராம் ( அதிமுக) சொத்து மதிப்பு: ரூ.172 கோடி. ( சிங்காநல்லூர் தொகுதி).
9. நித்தியானந்தம் (கொமதேக) சொத்து மதிப்பு- ரூ 170 கோடி. ( பொள்ளாச்சி தொகுதி).
10. ஆர். எஸ். முருகன் (தவெக) சொத்து மதிப்பு ரூ.158 கோடி. ( திருநெல்வேலி தொகுதி). ஆகியோர் அதிக சொத்துகளுடன் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.
-
பணக்கார வேட்பாளர்கள் லிஸ்ட்
4. இசக்கி சுப்பையா ( அதிமுக) – சொத்து மதிப்பு ரூ.419 கோடி. ( அம்பாசமுத்திரம் தொகுதி).
5. கார்த்திக் மோகன் ( திமுக) – சொத்து மதிப்பு ரூ.346 கோடி. ( வில்லிவாக்கம் தொகுதி).
6. மதியழகன் ( திமுக) – சொத்து மதிப்பு ரூ.304 கோடி. ( பர்கூர் தொகுதி).
-
பணக்கார வேட்பாளர்கள் லிஸ்ட்
- ஜோசப் விஜய் ( தவெக) – சொத்து மதிப்பு ரூ.648 கோடி. ( பெரம்பூர்- திருச்சி கிழக்கு தொகுதி).
- ஆதவ் அர்ஜுனா ( தவெக) – சொத்து மதிப்பு ரூ 534 கோடி. ( வில்லிவாக்கம் தொகுதி).
-
பணக்கார வேட்பாளர்கள் யார் யார்
தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவிட்டதை அடுத்து பணக்கார வேட்பாளர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம். முதலிடத்தில்
- லீமா ரோஸ் மார்ட்டின் (அதிமுக) – சொத்து மதிப்பு: ரூ.5,863 கோடி. ( லால்குடி தொகுதி).
-
டிக்ளரேஷன் அபவுட் ஏஜ் என்றால் என்ன?
வாக்காளர் ஒருவர் 18 வயது குறைந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டால் அந்த வாக்காளரிடம் (டிக்ளரேஷன் அபவுட் ஏஜ்) இணைப்பு -7 என்ற படிவத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டு வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.
-
வாக்காளரை அனுமதிக்கும் முறை
பின்னர், வாக்காளர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வாக்குச்சாவடி முகவர் அளித்த ஆட்சேபனை தவறு எனும் பட்சத்தில் வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.
-
வாக்காளர் அடையாளம் சந்தேகம்
வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் ஒருவரின் அடையாளம் பற்றி ஏதேனும் வாக்குச்சாவடி முகவருக்கு ஆட்சேபனை இருந்தால், அவரிடம் ரூ.2 சேலஞ்ச் கட்டணம் பெற வேண்டும். அதற்கான ரசீதையும் வழங்க வேண்டும்
-
சேலஞ்ச் ஓட்டு பற்றி தெரியுமா?
வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அடையாளத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சேலஞ்ச் ஓட்டு குறித்து தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசப்போகும் விஷயம் இதுதான்..
இரண்டு நாள் பயணத்தின் போது நடைபெறும் பொதுக்கூட்டங்களில், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் சாதனைகள், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட பங்களிப்புகள் மற்றும் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்த 131வது சட்டத் திருத்த மசோதா குறித்து மக்களிடம் எடுத்துரைத்து சிறப்புரையாற்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகம் வரும் ஆந்திரா முதல்வர்..
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தருகிறார். கோவை, சென்னை, மதுரை, சாத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அவர் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
-
சென்னையில் மட்டும் 4000 ரவுடிகள்.. அதிரடி ஆக்ஷனில் போலீசார்..
தலைநகரமான சென்னையில் மட்டும் 4 ஆயிரம் ரவுடிகள் உள்ளனர். இவர்கள், தேர்தல் நாளில் வாக்குப்பதிவின்போது சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் சட்டவிராத செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. எனவே, அவர்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து தேடி வருகின்றனர்.
-
நெருங்கும் தேர்தல்.. ரவுடிகளின் பட்டியலை கையில் எடுத்த போலீஸ்..
சென்னை உள்பட 38 மாவட்டங்களில் முக்கிய ரௌடிகள் குறித்த பட்டியலை காவல்துறை கையில் எடுத்துள்ளது. அதன்படி, அந்த ரவுடிகள் ஏ பிளஸ், ஏ, பி, சி என 4 வகைகளாக பிரிக்கப்பட்டு தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளனர். அந்த பட்டியலின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் ரவுடிகள் செயல்பாடுகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
தவெக தலைமை மக்களுக்கு அறிவுறுத்தல்..
விஜய்யின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள், விஜயின் பிரச்சார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்தவித வாகனங்களிலும் பின்தொடரக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வந்து காத்திருக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
சென்னை திருவள்ளூரில் பரப்புரை மேற்கொள்ளும் விஜய்..
ஏப்ரல் 20ஆம் தேதியான இன்று திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய இரண்டு மாவட்டங்களில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். நேற்று திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த வழிபாட்டு தலங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.
Published On - Apr 20,2026 7:02 AM