’நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.. அதிமுக ஒன்றிணையனும்’ சசிகலா சொன்ன விஷயம்!

Sasikala : அதிமுக ஆட்சி மீண்டும அமைய வேண்டும் என்றால், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார். மேலும், ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழிக்கு ஏற்ப திமுக குளிர் காய்ந்து கொண்டிருப்பதாகவும் அதிமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

’நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.. அதிமுக ஒன்றிணையனும் சசிகலா சொன்ன விஷயம்!

சசிகலா

Updated On: 

30 Aug 2025 10:20 AM

சென்னை, ஆகஸ்ட் 30 :  அதிமுக ஆட்சி மீண்டும் மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று சசிகலா (Sasikala) தெரிவித்துள்ளார். மேலும், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு (2026 Assembly Election) இன்னும் 8 மாதங்களே உள்ளது.  இதனால், அனைத்து கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, திமுக,  அதிமுக (AIADMK) தனது தேர்தல் பிரச்சாரத்தை இப்போதே தொடங்கி உள்ளது.  சமீபத்தில் தான், அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. எனவே, கட்சியை பலப்படுத்த அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. சமீபத்தில் தான், ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார்.  அதோடு, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் இணைய முனைப்பாக உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம்  அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும்  என கூறி வருகிறார்.

ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, அதிமுகவில் டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க மறுத்து வருகிறார். ஆனால், அதிமுக மூத்த தலைவர்களோ மூன்று பேரையும் இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம்  பேசி வருவதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு சசிகலா கடிதம் எழுதி  இருக்கிறார். அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசி இருக்கிறார். குறிப்பாக,  அதிமுக ஆட்சி மீண்டும் மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று சசிகலா  கோரிக்கை விடுத்துள்ளார். 

Also Read : தவெக கூட்டணிக்கு நோவா? பிரேமலதா சொன்ன முக்கிய பாயிண்ட்.. விஜய்க்கு அட்வைஸ்

மேலும், அக்கடிதத்தில், ”நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்என்ற மனதுடன் அனைவரும் ஒன்றிணைவதுதான், தமிழக மக்களுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய உதவியாக அமையும். நம் இருபெரும் தலைவர்களின் எண்ணங்களையும் அது ஈடேற்றிடும். இது தொண்டர்களின் இயக்கம் தொண்டர்களின் முடிவே இறுதியானது.

”நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்”


தியானது. உறுதியானது. உறுதியானது. அவர்களின் முடிவுக்கு சுட்டுப்பட்டு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் கழகத்தை வழிநடத்தி செல்வோம். ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட அண்ணா திராவிட முன் ன்ற்றக தான் தமிழ்நாட்டின் ஆகப்பெரிய கட்சி என்பதை நம் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் பலமுறை நிரூபித்து இருக்கிறார்கள். அந்த வலிமையை மீண்டும் நாம் பெற்றாக வேண்டும்.

Also Read : வாக்குறுதிகளில் 13% தான் திமுக நிறைவேற்றியது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத்தான் தமிழக மக்களும், கழகத்தொண்டர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். ப பல்வேறு கூட்டணி கட்சியினரும் இதைத்தான் விரும்புகின்றனர். அனைவரது விருப்பத்திற்கேற்ப ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அசுர பலத்துடன் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை நாம் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். மீண்டும் கழக ஆட்சி அமைவது உறுதி.