அன்புமணிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. நீதிமன்றத்தில் ராமதாஸ் அதிரடி மனு!

Ramadoss Files Petition: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணிக்கு எதிராக, அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கும், அன்புமணிக்கும் தொடர்பு இல்லை என்பன உள்ளிட்ட வார்த்தைகளை விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. நீதிமன்றத்தில் ராமதாஸ் அதிரடி மனு!

அன்புமணிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை

Published: 

16 Apr 2026 19:08 PM

 IST

பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகியோர் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதில், பாமகவின் தலைவர் அன்புமணி தான் என தேர்தல் ஆணையமும், டெல்லி உயர் நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்தும், மாம்பழம் சின்னத்தை முடக்க கோரியும் பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அன்புமணி மேற்கொள்ளும் பிரச்சாரத்தில் எனது படத்தை பயன்படுத்தக் கூடாது எனக் கூறி பாமக நிறுவன ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் செய்த மனுவில், அன்புமணிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. சட்டத்துக்கு விரோதமாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி நீடித்து வருகிறார்.

அன்புமணி பரப்புரையில் எனது படம் பயன்படுத்தக்கூடாது

அன்புமணியின் தேர்தல் பரப்புரை பயணத்தில் தனது புகைப்படத்தை உபயோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது. ஏற்கனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி கட்சியின் பொதுக்கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், பாட்டாளி மக்கள் கட்சியும், மாம்பழம் சின்னமும் அன்புமணிக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: மக்களை ஏமாற்ற மாட்டேன்.. ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க.. அரசியலில் அதிரடி காட்டும் விஜய்!

அன்புமணிக்கே பாமக-மாம்பழம் சின்னம் சொந்தம்

அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை குறிப்பிட்டு, அதனை ஏற்றுக் கொண்டது. இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இதில் கருத்து தெரிவிக்க முடியாது. எனவே, உரிமையியல் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்ற ராமதாஸ் தரப்பு, உரிமையியல் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்தது.

அன்புமணி – ராமதாஸ் தனித்தனியாக தேர்தலில் போட்டி

அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்து தேர்தலை சந்தக்க உள்ளது. வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதே போல, சசிகலா கட்சியுடன், ராமதாஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார். இந்த நிலையில், அன்பு மணிக்கு எதிராக ராமதாஸ் மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் படிக்க: மு.க.ஸ்டாலின் ஐயா ஒரு கீ கொடுக்கும் பொம்மை.. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேச்சு!

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி