புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியான அறிவிப்பு

Puducherry Assembly Elections : இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்திருந்தது. அதன் படி புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 9, 2026 அன்று வாக்குபதிவு நடைபெறவிருக்கிறது. இதனையடுத்து மே 4, 2026 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியான அறிவிப்பு

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்

Updated On: 

15 Mar 2026 17:22 PM

 IST

புதுச்சேரி , மார்ச் 15  : இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்திருந்தது. அதன் படி புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 9, 2026 அன்று வாக்குபதிவு நடைபெறவிருக்கிறது. இதனையடுத்து மே 4, 2026 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.  தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் 15, 2026 அன்று அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  5 மாநில தேர்தல்களை அறிவித்த அவர் தேர்தல் நடைமுறைகளையும் அறிவித்தார்.

புதுச்சேரி தேர்தல் தேதி எப்போது?

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மாரச் 15, 2026 அன்று அறிவித்திருக்கிறார். அதன் படி ஏப்ரல் 23, 2026 அன்று தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் ஏப்ரல் 9, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் அறிவித்துள்ளது. அதன் படி, மார்ச் 16, 2026 அன்று தேர்தலுக்கான அறிவிக்கப்பட்டு, மார்ச் 23, 2026 வரை வேட்பாளர்கள் நாமினேஷன் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24, 2026 அன்று நடைபெறுகிறது.

இதையும் படிக்க : திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் விசிக, கம்யூனிஸ்டுகள்?.. அண்ணாமலை சொன்ன ஷாக் தகவல்!!

மேலும் வேட்புமனுவை திரும்ப பெற மார்ச் 26, 2026 அன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 9, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் மே 4, 2026 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில வாரியாக தேர்தல் தேதி விவரம்

 

தேதி வாரியாக விவரம்

புதுச்சேரி மாநில தேர்தல் விவரம்

இதையும் படிக்க : சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் விதிகள் என்னென்ன?.. அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்..

தமிழ்நாடு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் மே 4, 2026 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் இந்த 3 மாநிலங்களில் பாஜக கூட்டணி கட்சிகள் இல்லாத ஆட்சி நடைபெற்று வருகின்றன.  தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

 

.

 

Follow Us
சமூக வலைதளங்களில் பாராட்டப்படும் பிரியங்காவின் மேட் இன் கொரியா
நேதாஜியின் தொப்பியை காணவில்லை - பேரன் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய கப்பல்களுக்கு ஹார்முஸ் வழியாக பாதுகாப்பாக செல்லலாம் - அனுமதி வழங்கிய ஈரான்
இந்திய சகோதரர்களுக்கு அமெரிக்காவில் 400 ஆண்டுகள் சிறை தண்டனை