கடந்த 5 ஆண்டுகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் பலனை அனுபவிக்கிறார்கள் – பிரதமர் மோடி விமர்சனம்..
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சில நாட்களுக்கு முன்னர் தான் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதை பயன்படுத்தி அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள். புதிய அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, திமுகவின் வெளியேற்றம் என்ற தெளிவான செய்தியை மக்கள் தெரிவிக்கிறார்கள்.

கோப்பு புகைப்படம்
கோவை, ஏப்ரல் 18, 2026: தமிழகத்திற்கு அதிக எம்பிக்கள் இடம் கிடைப்பதை திமுக விரும்பவில்லை என, கோவையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கக் கூடிய சூழலில், தேசிய தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி. அப்போது மக்கள் மத்தியில் சாலைப் பேரணி மேற்கொண்டார்; அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா தோல்வி:
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சில நாட்களுக்கு முன்னர் தான் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதை பயன்படுத்தி அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள். புதிய அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, திமுகவின் வெளியேற்றம் என்ற தெளிவான செய்தியை மக்கள் தெரிவிக்கிறார்கள்.
2023ஆம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நாம் நிறைவேற்றினோம். அதை கடந்த 16ஆம் தேதி முன்னெடுத்து வைத்தோம். தனிப்பட்ட முறையில் கூட அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு கோரினேன். ‘எல்லா பாராட்டுகளையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று தெளிவாக கூறினேன். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த என் சகோதரிகள் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் இடம் பெற வேண்டும் என்பதே என் ஆசை. ஆனால் இந்த உயர்வான முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெறுப்பு மற்றும் தாழ்ந்த தர அரசியலுக்காக இதை தியாகம் செய்தன. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தால், தமிழகத்தைச் சேர்ந்த சாதாரண பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் ஆகியிருப்பார்கள்.
அதிக எம்.பிக்கள் கிடைப்பதை திமுக விரும்பவில்லை:
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்திற்கு அதிக எம்பி இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. இதை திமுக விரும்பவில்லை என்பது தெளிவாகியுள்ளது. திமுகவின் செயல்கள் அம்பலமாகிவிட்டன; கூட்டுவலி பட்டுவிட்டது. கருப்பு உடைகள் அணிந்து தங்களது தீய எண்ணங்களை மறைக்க முடியாது. இனிமேல் தங்களது செயல்களின் விளைவுகளிலிருந்து தப்ப முடியாது. மக்கள் திமுகவின் உண்மையான முகத்தை அறிந்துள்ளனர்,” எனக் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போடக்கூடிய வாக்கு – தமிழக வளர்ச்சிக்கான தடைக்கல்.. முதல்வர் ஸ்டாலின்..
மேலும், “இன்று பெருமையாக சொல்லிக்கொள்ள திமுகவுக்கு எந்தச் சாதனையும் இல்லை. தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. திமுகவினரை எங்கே பார்த்தாலும் கேள்வி எழுப்புங்கள் — பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் மசோதாவை ஏன் எதிர்த்தீர்கள் என கேளுங்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் ஒரு குடும்பம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது:
தமிழ்நாட்டிற்கு கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.14 லட்சம் கோடி வழங்கியுள்ளது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் அதிகரித்துள்ளது. திமுகவின் கொள்கை ‘குடும்பத்துக்கு, குடும்பத்தால், குடும்பத்திற்காக’ என்பதே. முதல்வர், துணை முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர்—இப்படி அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
எனவே, வரக்கூடிய ஏப்ரல் 23ஆம் தேதி அவர்களுக்கு மக்கள் தெளிவான பதிலை வழங்க வேண்டும்,” என மக்களிடம் வலியுறுத்தி பேசினார்.