தமிழக சட்டமன்ற தேர்தல் 2026.. நேற்று ஒரே நாளில் 573 பேர் வேட்புமனு தாக்கல்!
Over 573 Filed Their Nomination At The First Day of Nomination | 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (மார்ச் 30, 2026) தொடங்கியது. இந்த நிலையில், முதல் நாளான நேற்று சுமார் 573 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்த திமுக தலைவர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய்
சென்னை, மார்ச் 30 : 2026 தமிழகம் சட்டமன்ற தேர்தலுக்கான (2026 Tamil Nadu Assembly Election) வேட்புமனு தாக்கல் (Nomination) நேற்று (மார்ச் 30, 2026) தொடங்கியது. முதல் நாளான நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 573 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் நேற்றை தினம் நடைபெற்ற வேட்புமனு தாக்கல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் தமிழகம்
தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மே 04, 2026 அன்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மொத்தம் 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 06, 2026 அன்றுடன் முடிவடைய உள்ளது. இந்த 8 நாட்களில் 4 நாட்கள் விடுமுறை என்பதால் மொத்தம் 4 நாட்கள் மட்டுமே வேட்பாளர்களுக்கு மனுதாக்கல் செய்ய நேரம் உள்ளது.
இதையும் படிங்க : வாக்குப்பதிவுக்கு முன்பு கடைபிடிக்கப்படும் அமைதி நேரம் என்றால் என்ன? அதன் விதிகள் கூறுவது என்ன?
முதல் நாளே வேட்புமனு தாக்கல் செய்த முதலமைச்சர் வேட்பாளர்கள்
இந்த நிலையில், வேட்புமனு தாக்கலின் முதல் நாளான நேற்றே முதலமைச்சர் வேட்பாளர்கள் மூன்று பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதாவது கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே நேரத்தில் பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிறகு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், காரைக்குடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க : 500 சவரன் நகை, சொகுசு கார்கள், ரூ. 1 கோடி வைரம்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஒரே நாளில் 573 பேர் வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கலின் முதல் நாளான நேற்று முதலமைச்சர் வேட்பாளர்கள் உட்பட சுமார் 573 பேர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். முதலமைச்சர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் இன்னும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யாமல் உள்ளன. இந்த நிலையில், அவர்களும் இன்னும் ஒருசில நாட்களில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.