AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : தங்கம், வெள்ளி விலை குறைந்தது.. இன்றைய நிலவரம் என்ன?

Gold and Silver Price In Chennai Today | சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : தங்கம், வெள்ளி விலை குறைந்தது.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Mar 2026 11:24 AM IST

சென்னை, மார்ச் 31 : சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) உயர்ந்து வரும் நிலையில், இன்று (மார்ச் 31, 2026) தங்கம் விலை குறைந்துள்ளது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை (Silver Price) கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் போர் காரணமாக கடும் ஏற்ற, இறக்கங்களை சந்திக்கும் தங்கம்

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஒரு மாத காலமாக மிக கடுமையான போர் நீடித்து வருகிறது. இந்த போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை உலக நாடுகள் எதிர்க்கொண்டுள்ளன. குறிப்பாக ஈரான் போரால் உலக அளவில் புவிசார் பதற்றங்கள் நிலவி வருகின்றன. இவற்றின் காரணமாக தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : இன்ஸ்டண்ட் பண பரிமாற்றம்.. ஆண்ட்ராய்டு, ஆப்பிளில் உள்ள பேமெண்ட் செயலிகள்.. லிஸ்ட் இதோ!

கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை நிலவரம்

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
22 மார்ச் 2026 ரூ.13,620 ரூ.1,08,960
23 மார்ச் 2026 ரூ.13,340 ரூ.1,06,720
24 மார்ச் 2026 ரூ.13,250 ரூ.1,06,000
25 மார்ச் 2026 ரூ.13,600 ரூ.1,08,800
26 மார்ச் 2026 ரூ.13,350 ரூ.1,06,800
27 மார்ச் 2026 ரூ.13,430 ரூ.1,07,440
28 மார்ச் 2026 ரூ.13,660 ரூ.1,09,280
29 மார்ச் 2026 ரூ.13,660 ரூ.1,09,280
30 மார்ச் 2026 ரூ.13,770 ரூ.1,10,160
31 மார்ச் 2026 ரூ.13,670 ரூ.1,09,360

தங்கம் விலை கடந்த சில நாட்களாக மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், நேற்று (மார்ச் 30, 2026) ஒரே நாளில் இரண்டு முறை மாற்றம் அடைந்தது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,670-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us