Gold Price : தங்கம் விலை குறைந்தது.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?
Gold Price Reduced In Chennai Today | சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, மார்ச் 30 : சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை (Gold Price) உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரான் போரால் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் காரணமாக தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. போரின் தொடக்கத்தில் மிக வேகமாக உயர தொடங்கிய தங்கம், அதன் பிறகு சரிய தொடங்கியது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து வந்த தங்கம் இன்று குறைந்துள்ளது. ஈரான் போரால் புவிசார் பதற்றங்கள் அதிகரித்துள்ளது, கச்சா எண்ணெய், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஆகியவற்றின் எதிரொலியாக தங்கம் இத்தகைய கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க : மார்ச் 30 முதல் ஏப்ரல் 8 வரை.. 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. செக் பண்ணுங்க!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,600-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.