தமிழகத்தில் குறைவான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி.. “சிங்கிள் டிஜிட்” மோதல்… எத்தனை பேர் தெரியுமா!
Ambasamudram Assembly Constituency: தமிழக சட்டமன்ற தேர்தலில் 5 வாக்காளர்கள் மட்டுமே போட்டியிடும் தொகுதியாக அம்பாசமுத்திரம் தொகுதி இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்யிடுகின்றனர்.

குறைந்த வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோர் கடந்த மார்ச் 30- ஆம் தேதி முதல் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வந்தனர். அதன்படி, கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 7-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலினை நடைபெற்றது. பின்னர், இன்று வியாழக்கிழமை ( ஏப்ரல் 9) வேட்பு மனுக்கள் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். அதன்படி, இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனுக்கள் திரும்ப பெருவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தமிழகத்தில் குறைந்த வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பாசமுத்திரம் தொகுதி இடம் பெற்றுள்ளது.
5 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி
இந்த தொகுதியில், திமுக கூட்ணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் வி.பி.துரை, அதிமுக சார்பில் இசக்கி சுப்பையா, நாம் தமிழர் கட்சி சார்பில் நத்தம் சிவசங்கரன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ராஜகோபால், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இசை கண்ணன் ஆகிய 5 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் தற்போதைய எம்எல்ஏவாக இசக்கி சுப்பையா இருந்து வருகிறார். அம்பாசமுத்திரம் தொகுதியில் தனக்கென முத்திரை பதித்துள்ள இசக்கி சுப்பையா இந்த தேர்தலிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: தல்லாகுளத்தில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சரவணன் வாக்கு சேகரிப்பு
அம்பாசமுத்திரம் தொகுதி கள நிலவரம் எப்படி உள்ளது
அதே வேளையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள ராஜகோபாலால் கள நிலவரம் சற்று மாறுபடவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களில் தற்போது வேட்பாளர்கள் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ள 5 வேட்பாளர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் ஆவர். இவர்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தங்களது கட்சி சார்பில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றனர்.
வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தாங்கள் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுக்கல் ஏற்கப்படுமா அல்லது ஏதேனும் காரணங்களால் நிராகரிக்கப்படுமா என்ற ஐயம் வேட்பாளர்கள் மத்தியில் இருந்து வந்திருக்கும். தற்போது, அந்த சந்தேகத்தை போக்கும் வகையில் வேட்பாளர்கள் இறுதி பட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தை புறக்கணிக்கும் ராகுல் காந்தி?.. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்?..