திமுக அமைச்சர்களில் குறைந்த சொத்து மதிப்புடையவர் யார் தெரியுமா… கவனம் ஈர்க்கும் தகவல்!
Minister Govi Chezhiaan: திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில் குறைந்த சொத்து மதிப்புடைய அமைச்சர் கோவி. செழியன் இருந்து வருகிறார். இவர் சொத்து மதிப்பு என்ன மற்ற அமைச்சர்களின் சொத்து மதிப்பு என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

திமுக அமைச்சர்களில் குறைந்த சொத்து மதிப்புடையவர் யார் தெரியுமா
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள திமுக அமைச்சர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் அவர்களின் சொத்துக்கள் அடங்கிய தகவல் கீழ்கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளது. இதில், குறைந்த சொத்து மதிப்புடைய அமைச்சர் யார் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் பார்ட் 1… அமைச்சர் காந்தி முதல் பெரியகருப்பன் வரை!
அமைச்சர் மூர்த்தி: இவரது பெயரில் அசையும் சொத்து- ரூ.2.77 கோடி, மனைவி பெயரில் ரூ.74 லட்சம், கூட்டுக்குடும்பம் ரூ.14 லட்சம். அசையா சொத்து- அமைச்சர் பெயரில் ரூ.10.08 கோடி, மனைவி பெயரில் ரூ.61 லட்சம், கூட்டுக்குடும்பம் ரூ.30 லட்சம் உள்ளது.
அமைச்சர் தாமோ அன்பரசன்: இவரது பெயரில் அசையும் சொத்து- ரூ.1.42 கோடி, மனைவி பெயரில் ரூ.2.31 கோடி. அசையா சொத்து- அமைச்சர் பெயரில் ரூ.8.60 கோடி, மனைவி பெயரில் ரூ.86 லட்சம்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: இவரது பெயரில் அசையும் சொத்து- ரூ.25 லட்சம், மனைவி பெயரில் ரூ.1.70 கோடி, கூட்டுக்குடும்பம் ரூ.33 லட்சம். அசையா சொத்து- அமைச்சர் பெயரில் ரூ.3.74 கோடி, மனைவி பெயரில் ரூ.1.16 கோடி, கூட்டு குடும்பம் ரூ.2.80 கொடி சொத்துக்கள் உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இவரது பெயரில் அசையும் சொத்து ரூ.3.3 கோடி, மனைவி பெயரில் ரூ.1.3 கோடி. அசையா சொத்து- முதல்வர் பெயரில் ரூ.2.95 கோடி, மனைவி பெயரில் ரூ.2.10 கோடி.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: இவரது பெயரில் அசையும் சொத்து ரூ.38 லட்சம். மனைவி பெயரில் ரூ.4.75 கோடி. அசையா சொத்து- அமைச்சர் பெயரில் ரூ.59 லட்சம், மனைவி பெயரில் ரூ.2.85 கோடி உள்ளது.
அமைச்சர் பெரியசாமி: அசையும் சொத்து ரூ.1.19 கோடி. மனைவி பெயரில் ரூ.79 லட்சம். அசையா சொத்து ரூ.4.71 கோடி. மனைவி பெயரில் ரூ.65 லட்சம்.
அமைச்சர் கே.என்.நேரு: அசையும் சொத்து- ரூ.1.25 கோடி, மனைவி பெயரில் ரூ.2.39 கோடி. அசையா சொத்து- அமைச்சர் பெயரில் ரூ.1.30 கோடி, மனைவி பெயரில் ரூ.1.50 கோடி.
அமைச்சர் மதி வேந்தன்: அசையும் சொத்து- ரூ.2.67 கோடி, மனைவி பெயரில் ரூ.1.94 கோடி. அசையா சொத்து- ரூ.1.40 கோடி, மனைவி பெயரில் ஏதுமில்லை.
அமைச்சர் நாசர்: அசையும் சொத்து- ரூ.1.37 கோடி, மனைவி பெயரில் ரூ.1.47 கோடி. அசையா சொத்து- ரூ.71 லட்சம், மனைவி பெயரில் ரூ.1.67 கோடி.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: அசையும் சொத்து- ரூ.1.27 கோடி, மனைவி பெயரில் ரூ.1.58 கோடி, அசையா சொத்து- ரூ.37 லட்சம், மனைவி பெயரில் ரூ.95 லட்சம்.
அமைச்சர் மெய்யநாதன்: அசையும் சொத்து- ரூ.24 லட்சம், மனைவி பெயரில் ரூ.89 லட்சம், அசையா சொத்து- ரூ.15 லட்சம், மனைவி பெயரில் ரூ.1.95 கோடி.
அமைச்சர் சேகர்பாபு: அசையும் சொத்து- ரூ.76 லட்சம், மனைவி பெயரில் ரூ.48 லட்சம். அசையா சொத்து- அமைச்சர் பெயரில் எதுவுமில்லை. மனைவி பெயரில் ரூ.1.68 கோடி.
அமைச்சர் ராஜேந்திரன்: அசையும் சொத்து- ரூ.56 லட்சம், மனைவி பெயரில் ரூ.86 லட்சம். அசையா சொத்து- ரூ.1.20 கோடி, மனைவி பெயரில் ரூ.20 லட்சம்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: அசையும் சொத்து-ரூ.61 லட்சம், மனைவி பெயரில் ரூ.29 லட்சம். அசையா சொத்து- அமைச்சர் பெயரில் எதுவுமில்லை, மனைவி பெயரில் ரூ.45 லட்சம்.
அமைச்சர் கோவி. செழியன்: அசையும் சொத்து- ரூ.35 லட்சம், மனைவி பெயரில் ரூ.87 லட்சம். அசையா சொத்து- ரூ.17 லட்சம், மனைவி பெயரில் ஏதுமில்லை. திமுகவில் உள்ள 34 அமைச்சர்களில் கோவி. செழியனுக்கே குறைந்த மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது.
மேலும் படிக்க: திமுக அமைச்சர்கள் சொத்து பட்டியல் பார்ட் 2: ராஜ கண்ணப்பன் முதல் சக்கரபாணி வரை… முழு விவரம் உள்ளே!