பிரச்சாரத்தின்போது திடீரென தண்டவாளத்தில் படுத்த மன்சூர் அலிகான் – காரணம் இதுவா?

தமிழக மட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டம் லால்குடியில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடவிருக்கிறார். இந்த நிலையில் லால்குடி அருகே கல்லக்குடி ரயில் நிலையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் திடீரென தண்டவாளத்தில் இறங்கி படுத்துக்கொண்டார். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரச்சாரத்தின்போது திடீரென தண்டவாளத்தில் படுத்த மன்சூர் அலிகான் - காரணம் இதுவா?

மன்சூர் அலிகான்

Published: 

31 Mar 2026 16:01 PM

 IST

திருச்சி, மார்ச் 31 : தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து கட்சி சார்பாகவும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனயைடுத்து மார்ச் 30, 2026 அன்று வேட்புமனு தாக்கல் செய்த அவர், திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள கல்லக்குடி ரயில் நிலையத்தில் மார்ச் 31, 2026 அன்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர் திடீரென தண்டவாளத்தில் இறங்கி படுத்துக்கொௐ்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த பொது மக்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தண்டாவளத்தில் படுத்த மன்சூர் அலிகான்

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அவரின் இந்த செய்கை குறித்து விளக்கம் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், தனக்கு திடீரென முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு வந்து விட்டதாகவும், அதற்காகவே தண்டாவளத்தில் தலைவைத்து படுத்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதயில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க : தமிழக சட்டமன்ற தேர்தல் 2026.. நேற்று ஒரே நாளில் 573 பேர் வேட்புமனு தாக்கல்!

வைரலாகும் வீடியோ

 

கடந்த 1953 ஆம் ஆண்டு கல்லக்குடி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி தண்டாவளத்தில் படுத்து போராட்டம் நடத்தினார். இதனையடுத்து ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த விவகாரம் வரலாற்றில் இடம்பெற்றது. பின் நாளில் புகழ்பெற்ற பாடகர் நாகூர் ஹனிபா பாடிய பாடல் மிகவும் பிரபலமானது. இந்த சம்வபத்தை நினைவுகூறும் வகையில் மன்சூர் அலிகான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க : யார் இலவசங்களை கேட்டது? படித்தவர்களுக்கு வேலைதானே கொடுக்க வேண்டும்? சீமான் ஆதங்கம்!!

மேலும் இதற்கு முன் லால்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் கேட்டதாகவும் அது கிடைக்காத காரணத்தால் சுயேட்சையாக போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். மன்சூர் அலிகான் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். ஆனால் ஒரு முறை கூட அவர் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், தேர்தல் பிரசாரத்தின் போது தண்டவாளத்தில் படுத்த மன்சூர் அலிகானின் இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

 

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..