AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kolathur Election Result: கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தவெக வேட்பாளரிடம் படுதோல்வி!!

kolathur Assembly Election Result 2026: கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து, அதிமுக சார்பில் பி.சந்தானகிருஷ்ணன் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட சறுக்கல்களைச் சரிசெய்து, முதல்வர் தொகுதியிலேயே அவருக்குக் கடும் நெருக்கடி கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. அதேபோல், தவெக உள்ளிட்ட புதிய கட்சிகளின் வரவு வாக்கு வங்கியில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

Kolathur Election Result: கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தவெக வேட்பாளரிடம் படுதோல்வி!!
முதல்வர் ஸ்டாலின், வி.எஸ்.பாபு
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 04 May 2026 16:01 PM IST

தமிழகத்தில் கடந்த ஏப்.23ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு உருவான இத்தொகுதி, தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோட்டையாகத் திகழ்கிறது. தொடர்ந்து, 3 முறை (2011, 2016, 2021) போட்டியிட்டு, மூன்று முறையும் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். ஒவ்வொரு தேர்தலிலும் அவர் தனது வெற்றி வித்தியாசத்தை கணிசமாக உயர்த்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், 2026 தேர்தலில் 4வது முறையாக அவர் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்பார்ப்பும் அதிகரித்து காணப்பட்டது.

முதல்வரை எதிர்த்து களம் கண்ட வேட்பாளர்கள்:

இதனிடையே, இத்தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து, அதிமுக சார்பில் பி.சந்தானகிருஷ்ணன் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட சறுக்கல்களைச் சரிசெய்து, முதல்வர் தொகுதியிலேயே அவருக்குக் கடும் நெருக்கடி கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. அதேபோல், நாம் தமிழர் கட்சி சார்பில் அ.சௌந்தரபாண்டியன் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வி.எஸ்.பாபு ஆகியோர் இத்தொகுதியில் களம் கண்டனர். புதிய கட்சிகளின் வரவு வாக்கு வங்கியில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

காலை முதல் பின்னடைவை சந்தித்த முதல்வர்:

இந்நிலையில், இன்று காலை தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, திமுக முன்னிலையில் இருந்தது. அப்போது, கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்குள் நிலைமை தலைகீழாக மாறியது. முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எல்.பாபு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். அதில், கூட தொடகத்தில் அவர் 5,000 வாக்குகள் மட்டுமே வித்தியாத்தில் இருந்தார். எனினும், ஒவ்வொரு சுற்றுகள் முடிவில் கணிசமாக வித்தியாச வேறுபாடு உயர்ந்துகொண்டே வந்தது.

தவெக வேட்பாளர் அபார வெற்றி:

அதன்படி, கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபு 80,407 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதேசமயம் முதல்வர் ஸ்டாலின் 72,321 வாக்குகள் பெற்று, சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். அவரைத் தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் சந்தானகிருஷ்ணன் 17,093 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல்வரின் தோல்வி யாரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்துவிட்டது. தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் 3 முறை வெற்றி பெற்று, அந்த தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை வழங்கியும் அவர் தோல்வியை தழுவியது திமுகவினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us