வாக்குச்சாவடியில் ரகளை… வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு… சுயேட்சை உள்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!

Kalasapakkam Voting Machine Break: திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததாக சுயேட்சை வேட்பாளர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது.

வாக்குச்சாவடியில் ரகளை... வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு... சுயேட்சை உள்பட 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!

வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த 4 பேர் கைது

Published: 

23 Apr 2026 15:58 PM

 IST

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சில இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதே போல, கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட கீழ்பாலூர் ஊராட்சியில் உள்ள அமைக்கப்பட்டுள்ள 193- ஆவது வாக்குச்சாவடியில் திடீரென சிலர் சுயேச்சை வேட்பாளரின் முகவர்கள் எனக் கூறிக்கொண்டு உள்ளே நுழைந்தனர். அப்போது, அவர்கள் ரகளையில் ஈடுபட்டதுடன் தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவியை தூக்கிப்போட்டு உடைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதனால், வாக்குச்சாவடியில் பணியில் இருந்த தேர்தல் அலுவலர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கை சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சுயேட்சை வேட்பாளர் உள்பட 4 பேர் கைது

இதில், வாக்குச்சாவடி மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், கலசப்பாக்கம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் உள்பட 4 பேரை கலசப்பாக்கம் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: Tamil Nadu Election Voting: தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. தனி ஆளாக வாக்களித்த இளம் பெண்..

கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்

கலசப்பாக்கம் தொகுதியில் திடீரென வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்ட காரணத்தால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. அத்துடன் சிறிது நேரம் வாக்குப்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதே போல, சென்னை ஆழ்வார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதே போல, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் இடையே வாக்காளர்கள் தொடர்பாக வாய்த் தகராறு ஏற்பட்டது.

தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

அத்துடன், அவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியில் உள்ள பெரும்பத்து கிராமத்தில் 2 கொலை சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதேபோல, திருச்சியிலும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Tamil Nadu Elections Poll Percentage: ஜனநாயக திருவிழா.. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு..

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..