தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகள்.. பொதுக்கூட்டங்கள் நடத்த ஓ. பன்னீர்செல்வம் திட்டம்..

O Panneerselvam Statement: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில், தமிழ்நாடின் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்ல பொதுக் கூட்டங்களை கட்சி நிர்வாகிகள் நடத்த வேண்டுமென்று என தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகள்.. பொதுக்கூட்டங்கள் நடத்த ஓ. பன்னீர்செல்வம் திட்டம்..

ஓபிஎஸ்

Published: 

04 Aug 2025 06:49 AM

2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 7 மாத காலங்களில் இருக்கக்கூடிய நிலை நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முக்கியமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகள் தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தேர்தலுக்கான அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஓ பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.

முதலமைச்சரை சந்தித்த ஓ. பன்னீர் செல்வம்:

அதனைத் தொடர்ந்து அவர் புதிய கட்சி தொடங்குவாரா என பல்வேறு யூகங்கள் வெளியானது. ஆனால் இப்படிப்பட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதாவது ஒரே நாளில் இரண்டு முறை தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: தீரன் சின்னமலை 220வது நினைவு தினம்.. மரியாதை செலுத்திய டிடிவி தினகரன்..!

அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைவார் என பல்வேறு தரப்பில் கருத்துக்கள் வெளியாகி வருகிறது. இல்லை என்றால் விஜயின் தமிழக வெற்றி கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் தான் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ” அதிமுக இயக்கத்தை துரோக கூட்டத்திடம் இருந்து மீட்டெடுப்பதற்காக எனது தலைமையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி நாம் போராடி வருகிறோம். இதில் நீதிமன்றத்திலும் மற்றும் மக்கள் மன்றத்திலும் வெற்றிக் கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

மேலும் படிக்க: உள்ளம் தேடி இல்லம் நாடி – பிரேமலதா விஜயகாந்தின் சுற்றுப்பயணம்..

பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டம்:

இந்தச் சூழ்நிலையில், வருகின்ற சட்டசபை பொதுத் தேர்தலை நாம் எதிர் கொள்ளும் வகையில், எம்ஜிஆரால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், ஜெயலலிதாவால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் பட்டி தொட்டி எங்கு எடுத்துச் செல்லவும், திமுக ஆட்சியில் தற்போது மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் மற்றும் தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லவும், அதிமுக அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லப்படுவதை மக்களுக்கு எடுத்துக் காட்டவும் பொதுக் கூட்டங்களை கட்சி நிர்வாகிகள் நடத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.