எடப்பாடி பழனிசாமியின் முதல் கட்ட சுற்றுப்பயணம்.. ரோட் ஷோ மூலம் மக்களை சந்திக்க திட்டம்..
Edappadi Palanisamy Campaign: 2026 சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஜூலை 7, 2025 தேதியான இன்று முதல் தொகுதிவாரியாக சென்று மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம், ஜூலை 7, 2025: 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை, 7, 2025) முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஜூலை 7 2025 தேதியான இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதிக்குட்பட்ட தேக்கம்பட்டியில் அவரது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தரப்பு சட்டமன்ற உறுப்பினர் வானத்தை ஸ்ரீனிவாசன் கலந்து கொள்கின்றனர். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் இந்த சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்கிறார்.
15 நாட்கள் மேற்கொள்ளும் முதல் கட்ட சுற்றுப்பயணம்:
அதேபோல் மாலை 6:00 மணி அளவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையம் தொகுதியில் மக்களை சந்திக்கும் போது உரையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் தொகுதியை அடுத்து கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டுறுகிறார். ஜூலை 8 2025 அன்று கோவையில் கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு ஆகிய தொகுதிகளை பார்வையிடுகிறார். அதே போல் ஜூலை 10 2025 அன்று விழுப்புரம் விக்கிரவாண்டி திண்டிவனம் ஆகிய மூன்று தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஜூலை 12 2025 அன்று கடலூர் பண்ருட்டி நெய்வேலி ஆகிய மூன்று தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து ஜூலை 14 2025 அன்று குறிஞ்சிப்பட்டி விருதாச்சலம் திட்டக்குடி ஆகிய தொகைகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கடைசியாக ஜூலை 21 2025 அன்று மன்னார்குடி திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் ஆகிய மூன்று தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார்.
ரோட் ஷோ மூலம் மக்களை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி:
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் “புரட்சித் தமிழர்” @EPSTamilNadu அவர்கள்
‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு 7.7.2025 முதல் தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதையொட்டி இன்று புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயண சிறப்பு… pic.twitter.com/dQkDENiB5v— AIADMK – -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) July 5, 2025
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சென்று மக்களை சந்திக்கிறார் அதில் முதல் கட்ட பயணத்தை ஜூலை 7 2025 தேதியான இன்று தொடங்குகிறார். அதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் ரோட் ஷோ மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார். தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதற்காக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் பூத் கமிட்டி ஏஜென்ட்கள் அமைப்பது என பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் முக்கியமாக தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்றும் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.