மகளிருக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை…ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம்…அதிமுகவின் அசத்தல் தேர்தல் வாக்குறுதி!

AIADMK Election Promises: தமிழகத்தில் மகளிருக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை மற்றும் ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்படும் என்று அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியை எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். இதே போல, மேலும் சில தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார் .

மகளிருக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை...ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம்...அதிமுகவின் அசத்தல் தேர்தல் வாக்குறுதி!

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள்

Updated On: 

17 Jan 2026 13:09 PM

 IST

எம். ஜி. ஆர். பிறந்த நாளையொட்டி, சென்னை அ. தி. மு. க. தலைமை அலுவலக வளாகத்தில் இருக்கும் அவரின் திருவுருவ சிலைக்கு அ. தி. மு. க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக மகளிர் நலன் குல விளக்கு திட்டத்தின் கீழ், சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இந்த தொகையானது பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்படும். இதே போல, தற்போது நடைமுறையில் இருக்கும் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் அப்படியே தொடரும். அம்மா இல்லம் திட்டத்தின் கீழ், கிராமப் புறங்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் இடம் வாங்கப்பட்டு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

5 லட்சம் மகளிருக்கு இரு சக்கர வாகனம்

இதே போல, நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அடுக்குமாடி வீடு கட்டித்தரப்படும். இதே போல, பட்டியல் இன மக்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள் திருமணமாகி செல்லும் போது அவர்களுக்கு அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும். மகளிருக்கு ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 5 லட்சம் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்படும்.

மேலும் படிக்க: பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுக்கு அழைப்பில்லை….ஓ.பன்னீர் செல்வம்!

விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் மண்டலம் வாரியாக பொது மக்களை சந்தித்து அவர்களிடம் பல்வேறு கருத்துக்களை பெற்றுள்ளனர். இந்த பணிகள் நிறைவடைந்த உடன் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தயார் செய்த அறிக்கை அனைத்தும் 2- ஆம் கட்ட அறிவிப்புகளாக வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து,  செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பதில் அளித்து பேசியதாவது: நிர்வாக திறமை இல்லாத திமுக ஆட்சியில் மகளிருக்கு ரூ. ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.

திமுக ஆட்சியில் ரூ.5.5 லட்சம் கோடி கடன்

எனவே. நிர்வாக திறமை உடைய அதிமுக ஆட்சி காலத்தில் மகளிர்க்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை தாராளமாக வழங்குவோம். திமுக ஆட்சியில் நிபுணர் குழு அமைக்கப்பட்ட நிலையிலும், தமிழக அரசின் கடன் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சி முடிவடையும் நிலையில், சுமார் ரூ.5.5 லட்சம் கோடி கடன் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசுப் பணி-கார் பரிசு…முதல்வர் வழங்க உள்ளார்!

‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..
51 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம்.. விடுதலை செய்யப்பட்ட நபர்..
பணம் பற்றாக்குறை காரணமாக காப்பீட்டு பிரீமியம் செலுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இதை செய்தால் போதும்..
"சொமேட்டோவில் நடக்கும் மோசடி சம்பவங்களை பகிர்ந்த சிஇஓ".. எச்சரிக்கை மக்களே!!