பாஜகவின் பாதம் தாங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி… முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!
DMK Leader MK Stalin Campaign: பாரதீய ஜனநாத கட்சியின் பாதம் தாங்கியாக அதிமுக பொதுச்செயலாலரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி துப்பு கெட்டு மாறி விட்டதாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

திருச்சியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
திருச்சியில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுக அளித்த வாக்குறுதிகள் மற்றும் சொல்லாத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதல் அமைச்சராக பதவி ஏற்ற முதல் நாளை மகளிர் விடியல் பேருந்துக்காக முதல் கையெழுத்து போட்டேன். 5 ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ.26 ஆயிரம் கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தலைநகர் சென்னைக்கு சவால்விடும் வகையில் திருச்சியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஜாதி கலவரங்கள், மத கலவரங்கள் கிடையாது. பாஜக ஆளும் மாநிலங்களைப் போல மத கலவரங்கள் கிடையாது. உத்தர பிரதேசத்தை போல கும்பல் வன்முறை கிடையாது. மணிப்பூர் மாநிலம் மாதிரி தொடர் வன்முறைகள் கிடையாது. இவற்றையெல்லாம் உருவாக்க வேண்டும் என்று பாஜக செய்த சூழ்ச்சிகளை நாம் முறியடித்துள்ளோம்.
அதிமுக-பாஜக கூட்டணிக்கு தோல்வியை அளிக்க வேண்டும்
அமைதியான சூழல் காரணமாகவே தமிழகத்தில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகத்தை படு குழியில் தள்ளிய அதிமுகவும் இந்தியாவை வரலாறு காணாத சரிவுக்கு கொண்டு போய் கொண்டிருக்கின்ற பாஜகவும் சேர்ந்து அமைத்திருக்கும் இந்த கூட்டணிக்கு தோல்வியே கொடுக்க வேண்டும். மதுரையில் பாஜக சார்பில் நடைபெற்ற விழாவில் பெரியார் படத்தை வைக்க கூடாது என்று பாஜக சொன்னதும் அதனை சுயமரியாதை இல்லாமல் அகற்ற துணிந்தவர் தான் பழனிசாமி.
மேலும் படிக்க: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமான முக்கிய புள்ளிகள்… வகித்த – வகிக்கும் பதவிகள்.. முழு விவரம்!
பாஜகவின் பாதம் தாங்கியாக இருக்கிறார் துப்பு கெட்ட பழனிசாமி
பாஜக ஆதரவு கூட்டத்தில் தந்தை பெரியார் மற்றும் அண்ணாவை கொச்சைப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வீடியோவை பார்த்துக் கொண்டு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் சொரணை இல்லாமல் இருந்தனர். திராவிடம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது, புராணங்களை எல்லாம் நான் படித்தது கிடையாது என்று சிரித்துக் கொண்டே கூறியவர் தான் பழனிசாமி. இந்த துப்பு கெட்ட பழனிசாமி யாரை கேடுகெட்டாலும் பரவாயில்லை தனது பதவியே காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று பாஜகவின் பாதம் தாங்கியாக இருந்து கொண்டிருக்கிறார்.
முழு சங்கியாக மாறிய பழனிசாமி
சிறுபான்மையினர் சமூகத்துக்கும், இலங்கை தமிழர்களுக்கும் எதிராக குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்து துணை போன கட்சி தான் அதிமுக. இதற்கு அன்புமணி ராமதாஸும் ஆதரவாக வாக்களித்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி இந்த சட்டத்தை ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பாஜகவுடன் கூட்டு சேர்ந்து முழு சந்திரமுகியாகவே, முழு சங்கியாகவே மாறி உள்ளார் பழனிசாமி.
மேலும் படிக்க: போலி தேர்தல் மெசேஜ்: ஒரு லிங்க் உங்கள் பணத்தை பறிக்கலாம்..!