மாறும் கூட்டணி கணக்கு? என்டிஏ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக… சுதீஷ் சொன்ன தகவல்!

L.K. Sudhish On NDA Alliance : சென்னையில் நடந்த மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சியில் என்டிஏ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டுள்ளார். அதோடு, மேடையில் அமர்ந்திருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கை குலுக்கி பேசியுள்ளார்.

மாறும் கூட்டணி கணக்கு? என்டிஏ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக... சுதீஷ் சொன்ன தகவல்!

எல்.கே. சுதீஷ்

Updated On: 

30 Aug 2025 13:28 PM

 IST

சென்னை, ஆகஸ்ட் 30 :  சென்னையில் ஜிகே முப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் பாஜக மற்றும் அதிமுக தலைவர்களுடன் (NDA Alliance) மேடையில் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ்  (L.K.Sudhish) பங்கேற்று இருப்பது பேசும் பொருளாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக திமுகவுடன் தேமுதிக நெருக்கம் காட்டி வந்த நிலையில், திடீரென பாஜக தலைவர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்ததோடு,  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கை குலுக்கி பேசியது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. இதனால், திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக முனைப்பு காட்டி வரும் நிலையில், தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் அதிமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே, அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது.

கூட்டணி அமைத்திருந்தாலும், அதனை பலமாக்க எடப்பாடி பழனிசாமி மற்ற கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க முனைப்பு காட்டி வருகிறது. விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளை இணைக்க எடப்பாடி பழனிசாமி முயன்று வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவில் அங்கம் வகித்த தேமுதிக தற்போது வரை யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கவில்லை. ஏற்கனவே, ராஜ்யசபா சீட் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது பிரேமலதா அதிருப்தியில் இருக்கிறது. எனவே, அவர் எடப்பாடி பழனிசாமி பக்கம் போகுவது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

Also Read :  தவெக கூட்டணிக்கு நோவா? பிரேமலதா சொன்ன முக்கிய பாயிண்ட்.. விஜய்க்கு அட்வைஸ்

என்டிஏ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக

அதே நேரத்தில், திமுக கூட்டணி கட்சிகளிடம் தேமுதிக நெருக்கம் காட்டி வருகிறது. சமீபத்தில் கூட முதல்வர் ஸ்டாலின் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தார். அதற்கு முன்னதாக, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இப்படியாக திமுக கூட்டணி பக்கம் பிரேமலதா நெருக்கம் காட்டுகிறார்.

இருப்பினும், தேதிமுகவின் கூட்டணி முடிவு 2026 ஜனவரி 9ஆம் தேதி கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளதுஇப்படியான சூழலில், என்டிஏ தலைவர்களுடன் திடீரென எல்.கே.சுதீஷ் மேடையில் அமர்ந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறதுஅதாவது, சென்னையில் ஜிகே மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் இவர்களுடன் அமர்ந்துள்ளார். நிர்மலா சீதாராமனுக்கு அருகில், எல்.சுதீஷ் அமர்ந்திருக்கிறார். இதனால், என்டிஏ கூட்டணியில் தேமுதிக செல்லுமா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

Also Read : விஜயால் விஜயகாந்த் ஆக முடியாது.. கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே – பிரேமலதா விஜயகாந்த்

இதனை அடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் என்டிஏ கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதில் அளித்த எல்.கே. சுதீஷ், “நட்பிக் அடிப்படையிலேயே மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இதற்கு அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. 2026 தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றி பெறும்” எனக் கூறினார்.

Related Stories
தமிழ்நாட்டினருக்கு அனுமதி இல்லை… தவெக பொதுக்கூட்டம் – புதுச்சேரி காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்
234 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் நாம் தமிழர் கட்சி.. திருச்சியில் அடுத்த ஆண்டு மக்களின் மாநாடு..
அந்த கனவை நொறுக்கி விட்டீர்கள்…. கோபியில் செங்கோட்டையனை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
29 மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. களப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவு..
யாருடன் கூட்டணி? டிச. 30 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் – பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டம்..
கர்நாடக காங்கிரஸில் அதிகாரப் போட்டி தீவிரம்…. டெல்லிக்கு விரைந்த எம்எல்ஏக்கள் – என்ன நடக்கிறது.
அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை