கருத்துக்கணிப்புகள், மக்கள்கணிப்புகள் என எதிலும் நாம்தான்.. படைப்போம் வரலாறு – முதல்வர் ஸ்டாலின்..

CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தினமும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலை நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்; மாலை நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

கருத்துக்கணிப்புகள், மக்கள்கணிப்புகள் என எதிலும் நாம்தான்.. படைப்போம் வரலாறு - முதல்வர் ஸ்டாலின்..

கோப்பு புகைப்படம்

Published: 

20 Apr 2026 09:31 AM

 IST

சென்னை, ஏப்ரல் 20, 2026: கருத்துக்கணிப்புகள், மக்கள் கணிப்புகள் என எதை எடுத்தாலும் நாம்தான் வெல்வோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. தேசிய தலைவர்கள் முதல் மாநிலத் தலைவர்கள், வேட்பாளர்கள் என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இதில் குறிப்பாக திமுக, மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக களமிறகும் முதல்வர் சந்திரபாபு நாயுடு.. இரண்டு நாள் பயணத்திட்டம் என்ன?

அனல் பறக்கும் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின்:

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தினமும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலை நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்; மாலை நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

அந்த வகையில், நேற்று பிற்பகல் 2 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பரப்புரை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட தொகுதிகளிலும் பரப்புரை செய்தார்.

வெல்வோம் 200, படைப்போம் வரலாறு:

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நேற்று பிற்பகல் 2 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பரப்புரையைத் தொடங்கி, சென்னை எண்ணூரில் இரவு 10 மணிக்கு பிரச்சாரத்தை முடித்தேன்.

ஓசூரில் தொடங்கி மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர் ஆகிய தொகுதிகளில் சாலைகளில் மக்கள் அளித்த வரவேற்புடன், சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வீதி வீதியாக வாக்கு சேகரித்தேன். இரவு திருவொற்றியூர் நெட்டுக்குப்பத்தில் வாக்கு சேகரித்த பின், மீனவர் நண்பர் ஒருவரது வீட்டில் உணவருந்தியதும் தான் நேற்று நாள் நிறைவுற்றது.

இன்று காலை சூரியன் உதித்ததும் அண்ணா நகர் நோக்கி புறப்பட்டுவிட்டேன். கருத்துக்கணிப்புகளாக இருந்தாலும், மக்கள் கணிப்புகளாக இருந்தாலும் — எதை எடுத்தாலும் நாம்தான் வெல்வோம். வெல்வோம் 200, படைப்போம் வரலாறு,” என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..