வெற்றி ஒன்றே இலக்கு, ஓய்வின்றி உழைக்கும் கழக செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள் – முதல்வர் ஸ்டாலின்..

தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதற்கிடையில், வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மாவட்டம் தோறும் சென்று, சட்டமன்றத் தொகுதிகளில் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதே சமயம், சாலைப் பயணம் மேற்கொண்டு மக்களின் மனநிலையையும் கள ஆய்வு செய்து வருகிறார்.

வெற்றி ஒன்றே இலக்கு, ஓய்வின்றி உழைக்கும் கழக செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள் - முதல்வர் ஸ்டாலின்..

கோப்பு புகைப்படம்

Published: 

03 Apr 2026 15:15 PM

 IST

சென்னை, ஏப்ரல் 3, 2026: “வெற்றி ஒன்றே இலக்கு; ஓய்வின்றி உழைக்கும் கழகத்தின் செயல்வீரர்களுக்கு பாராட்டுகள்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னும் சில நாட்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் மும்முரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தேர்தலுக்கு தயாராகும் திமுக:

திமுக கூட்டணியை எடுத்துக்கொண்டால், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேமுதிக உள்ளிட்ட 21 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியில் பெரிய மாற்றமின்றி அதே கூட்டணி தொடர்கிறது; மேலும் சில புதிய கட்சிகளும் இணைந்துள்ளன. இதனால் திமுகவிற்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது என கூறப்படுகிறது.

மேலும் படிக்க: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி சீனிவாசன்.. வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்..

தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதற்கிடையில், வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெற்றி ஒன்றே இலக்கு – தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்:

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மாவட்டம் தோறும் சென்று, சட்டமன்றத் தொகுதிகளில் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதே சமயம், சாலைப் பயணம் மேற்கொண்டு மக்களின் மனநிலையையும் கள ஆய்வு செய்து வருகிறார்.

மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தல்… தேசிய கட்சிகள் 8 தொகுதியில் நேரடி போட்டி… மக்கள் ஆதரவு யாருக்கு!

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வெற்றி ஒன்றே இலக்கு; ஓய்வின்றி உழைக்கும் கழகத்தின் செயல்வீரர்களுக்கு பாராட்டுகள். நேற்று இரவு கோவையில் முதற்கட்ட பரப்புரை பயணத்தை நிறைவு செய்துவிட்டு சென்னைக்கு திரும்பினேன். இன்று காலை தமிழ்நாடு முழுவதும் களப்பணியாற்றி, மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக உறுதி செய்து வரும் கழக செயல்வீரர்களுடன் உரையாடி ஊக்கப்படுத்தினேன். மாலை பாளையங்கோட்டையில் இரண்டாம் கட்ட பரப்புரை பயணத்தை தொடங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..