எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கார் எண்.. நயினார் நாகேந்திரனுக்கு ரெடியான பிரச்சார வாகனம்..
Nainar Nagendran Campaign Vehicle: 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அவருக்கு எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கார் எண் கொண்ட பிரச்சார வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
நெல்லை, ஆகஸ்ட் 8, 2925: தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காரின் பதிவு எண்ணில் நயினார் நாகேந்திரனுக்கு பிரத்தியேகமாக பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது அரசியலில் பெரும் பேசப் பொருளாக மாறி உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாநிலம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மேலும் பாஜக தரப்பில் தேர்தலை சந்திப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கட்சியை பலப்படுத்துவது, கள நிலவரம் எப்படி இருக்கிறது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து நான்கு இடங்களை கைப்பற்றியது. இந்த முறை அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என பாஜக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
எம்.ஜி.ஆர் பயன்படுத்திய வாகன எண்:
அதன்படி பாஜகவின் முதல் மாநாடு திருநெல்வேலியில் வருகின்ற 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் துவங்குவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்காக அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ஐயப்பன் என்பவர் நயினார் நாகேந்திரனுக்கு பிரத்யேகமாக பிரச்சார வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும் படிக்க: +1 பொதுத்தேர்வு ரத்து.. 8ம் வகுப்பு வரை ஆல்பாஸ்.. வெளியான முக்கிய அறிவிப்பு!
இந்த வாகனத்தை நயினார் நாகேந்திரன் இடம் ஒப்படைப்பதற்காக நெல்லையில் இருக்கக்கூடிய மாவட்ட பாஜக அலுவலகத்திற்கு வந்திருந்தார். இந்த வாகனத்தின் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது இந்த வாகனத்தின் பதிவு எண் தான்.
வாகனத்தை ஓட்டிப்பார்த்த நயினார் நாகேந்திரன்:
அரியலூர் மாவட்ட முன்னாள் பாஜக தலைவர் திரு.ஐயப்பன் அவர்கள், தன்முனைப்பாக முன்வந்து தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தும் வகையில் பிரத்யேக வாகனத்தை வடிவமைத்துக் கொடுத்தார்.
திருநெல்வேலியில் இந்த வாகனத்தில், நமது கட்சியின் கொடியை ஏற்றி, நானே வாகனத்தை இயக்கி முதல் பயணத்தை துவக்கி… pic.twitter.com/XPd2sSLP33
— Nainar Nagenthiran (@NainarBJP) August 7, 2025
அதாவது தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்த அதே பதிவு எண் தான் இந்த வாகனத்திலும் இடம்பெற்றுள்ளது. 4777 என்ற பதிவு எண் கொண்ட வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த நயினார் நாகேந்திரன் உடனடியாக தனது காரில் இருந்து கட்சி கொடியை கழட்டி தானே அந்த பிரச்சார வாகனத்தில் மாட்டி அவர் அந்த வாகனத்தை நெல்லை மாவட்டம் முழுவதும் ஓட்டி வந்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எம்ஜிஆரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்த நயினார் நாகேந்திரன் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவிலிருந்து விலகி அவர் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.