புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – என்.ஆர்.காங்கிரஸிற்கு எத்தனை சீட்? பாஜக அறிவிப்பு

Puducherry Assembly Polls : புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களும்,  பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 14 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.  அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் - என்.ஆர்.காங்கிரஸிற்கு எத்தனை சீட்? பாஜக அறிவிப்பு

மன்சுக் மாண்டவியா - என்.ரங்கசாமி

Updated On: 

13 Mar 2026 21:59 PM

 IST

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களும்,  பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 14 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் ஏறக்குறைய கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில், அண்டை மாநிலமான புதுச்சேரியில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயாக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை புதுச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் மார்ச் 13, 2026 அன்று நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம், பாஸ்கர், ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படிக்க : பாஜகவுடன் கூட்டணி? தவெகவில் திடீர் ஆலோசனை… மாவட்ட செயலர்கள் கூறிய முக்கிய தகவல்!

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமியிடம் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையவுள்ளதா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக தலைவர் விஜய் இணையவுள்ளாரா என்பது பற்றி எனக்கு தெரியாது. அவரை நான் சந்தித்தே பல மாதங்களாகிவிட்டது என்று பதிலளித்தார்.

புதுச்சேரி பாஜகவின் எக்ஸ் பதிவு

 

அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சரும் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான மான்சுவிக் மாண்டவியா, நிர்மல் குமார் சரானா ஆகியோர் தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை மார்ச் 13, 2026 அன்று மாலை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பேசிய புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி , பாஜகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு விவரமாக சொல்கிறேன் என்றார்.

இதையும் படிக்க : சிபிஐ விசாரணை… தனி விமானத்தில் டெல்லி பறக்கும் விஜய்.. விடாமல் துரத்தும் கரூர் சம்பவம்!

அவரைத் தொடர்ந்து பேசிய பாஜக தேர்தல் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா புதுச்சேரியில் தேசிய ஜனநாய கூட்டணியில் என்.ஆர்.காங்கிஸிற்கு 16 தொகுதியிலும், பாஜக 14 தொகுதியிலும் போட்டியிடும். மேலும் பாஜக வசம் உள்ள 14 தொகுதிகளில் அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றார்.

Follow Us
போர் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம் - அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
அறிவு இல்லாமல் கீழ்த்தரமான… தன் மீதான விமர்சனத்துக்கு திரிஷா அதிரடி பதில்
தவறுதலாக ரூ.2 லட்சத்தை ஆற்றில் வீசிய குடும்பம்.. மீட்டுக் கொடுத்த தீயணைப்பு வீரர்கள்..
இந்தியாவில் முதல் நீதிமன்ற உத்தரவு: பாசிவ் யூத்தனேஷியாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்