ஆண்டிப்பட்டியில் நிச்சயம் போட்டி.. தை மாதம் கூட்டணி முடிவு வெளியாகும் – டிடிவி தினகரன் திட்டவட்டம்..
TTVK Dinakaran: வரும் தேர்தலில் அமமுக சட்டமன்றத்தில் நுழைவது உறுதி என்றும், எங்களுக்கு புனித பூமியாக இருப்பது ஆண்டிப்பட்டி தொகுதிதான் என்றும், ஆகவே நிச்சயமாக ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றும், ஆண்டிப்பட்டி தொகுதி வழங்கப்பட்டால் கூட்டணியில் செல்லலாம்; இல்லையெனில் தனித்தும் நின்று போட்டியிடுவோம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
மதுரை, டிசம்பர் 27, 2025: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஆண்டிப்பட்டி தொகுதியில் நிச்சயமாக போட்டியிடுவதாகவும், சீட் வழங்கப்பட்டால் கூட்டணியில் செல்லலாம்; இல்லையெனில் தனித்தும் போட்டியிடுவோம் எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனிடையே, எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன்:
இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: ஊருக்கு போறீங்களா? தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்களின் நேரம் மாற்றம் – எப்போ தெரியுமா?
இந்த நிலையில், டிடிவி தினகரன் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர வேண்டும் என வலியுறுத்தப்படுவதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. அண்மையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரனை சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அண்டிப்பட்டியில் நிச்சயம் போட்டியிடுவோம்:
இதனைத் தொடர்ந்து, மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், கூட்டணி குறித்து தை மாதத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், வரும் தேர்தலில் எங்கள் இயக்கத்திற்கு எது நல்லதோ அந்த முடிவே எடுக்கப்படும் என்றும், எந்த கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அமமுகதான் என்றும், தை மாதம் பிறந்ததும் கூட்டணி குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: இனி வேளச்சேரி – தாம்பரம் 10 நிமிடங்களில் செல்லலாம்- சென்னை மெட்ரோவின் புதிய திட்டம்
வரும் தேர்தலில் அமமுக சட்டமன்றத்தில் நுழைவது உறுதி என்றும், எங்களுக்கு புனித பூமியாக இருப்பது ஆண்டிப்பட்டி தொகுதிதான் என்றும், ஆகவே நிச்சயமாக ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றும், ஆண்டிப்பட்டி தொகுதி வழங்கப்பட்டால் கூட்டணியில் செல்லலாம்; இல்லையெனில் தனித்தும் நின்று போட்டியிடுவோம் என்றும் தெரிவித்தார்.
கூட்டணி குறித்து தை மாதம் முடிவு எடுக்கப்படும்:
கூட்டணியில் அமமுக வர வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி வருவதாகவும், ஆனால் அது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், கூட்டணி தொடர்பாக தன்னிடம் பேசுவார்களே தவிர தாம் யாரையும் நேரில் சந்திக்கவில்லை என்றும், தை மாதம் பிறந்ததும் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.