நெல்லை நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக பாஜக ஆலோசனை.. திட்டம் என்ன?
ADMK BJP Meeting: 2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் நிலையில், அதிமுக பாஜக ஆலோசனை கூட்டம் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைபெற்றது. 2025, ஆகஸ்ட் 17ஆம் தேதி நெல்லையில் பாஜக மாநில மாநாட்டில் அதிமுகவினர் கலந்துக்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கோப்பு புகைப்படம்
நெல்லையில் இருக்கக்கூடிய நயினார் நாகேந்திரனின் இல்லத்தில் அதிமுக பாஜக கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்திருந்த பொழுது அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்த ஆலோசனைக் கூட்டமானது முதல் முறையாக நடை பெற்றது. திருநெல்வேலியில் இருக்கக்கூடிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரசியல் கட்சி ஆலோசனை கூட்டங்கள்:
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பிலும் பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆளும் திமுக அரசு தரப்பில் உடன்பிறப்பே வா என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மு.க. ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்க: 90’s வைபுக்கு ரெடியாகுங்க.. சென்னைக்கு மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பஸ்.. எந்த ரூட்ல தெரியுமா?
அதேபோல் வருகின்ற ஒன்பதாம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் அன்புமணி பொதுக்குழு கூட்டத்தை நடத்துகிறார். அதே கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் தரப்பிலும் சமீபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதிமுக பாஜக கூட்டணி:
இப்படிப்பட்ட சூழலில் ஆகஸ்ட் 3, 2025 தேதியான நேற்று மாலை நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக பாஜக கூட்டணி நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன் தமிழிசை சௌந்தர்ராஜன் அதிமுக தரப்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடம்பூர் ராஜு, சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் யுக்திகள் மற்றும் பரப்புரை வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: ‘கூட்டணி குறித்து பேசினால் ஒழுங்கு நடவடிக்கை’ ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் உத்தரவு!
பாஜக மாநாட்டில் அதிமுக?
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணம் தொடக்கத்தின் போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி நெல்லையில் பாஜக மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.