வங்கியில் கடனுக்கு விண்ணப்பிக்க பே ஸ்லிப் இல்லையா?.. கவலை வேண்டாம்.. இந்த அம்சங்கள் போதும்!

Get Bank Loan Without Pay Slip | வங்கிகளில் ஒரு தனி நபர் கடன் வாங்க வேண்டும் என்றால் அவர் பே ஸ்லிப் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஆனால், பே ஸ்லிப் இல்லாமலே கடன் வாங்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

வங்கியில் கடனுக்கு விண்ணப்பிக்க பே ஸ்லிப் இல்லையா?.. கவலை வேண்டாம்.. இந்த அம்சங்கள் போதும்!

மாதிரி புகைப்படம்

Published: 

28 Mar 2026 11:25 AM

 IST

மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும், எதிர்பாராத நேரங்களில் பண தேவை ஏற்படலாம். இதற்காக தான் பெரும்பாலான பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக பணத்தை சேமித்து வைப்பர். ஏதேனும் பொருளாதார சிக்கல் அல்லது பண தேவை ஏற்பட்டால் அதனை பயன்படுத்திக்கொள்வர். ஆனால், பணம் கையில் இல்லாதவர்கள் வங்கிகளில் கடன் வாங்க முயற்சி செய்வர். அவ்வாறு ஒரு தனிநபருக்கு கடன் வழங்குவதற்கு முன்னதாக வங்கிகள் அவர்களிடம் இருந்து சில முக்கிய ஆவணங்களை சான்றாக கோரும். அத்தகைய ஆவணங்களில் ஒன்றுதான் மாத வருமானத்திற்கான பே ஸ்லிப் (Pay Slip). பெரும்பாலான வங்கிகள் இந்த பே ஸ்லிப் அடிப்படையில் தான் தனிநபர் கடன்களை வழங்குகின்றன. இந்த நிலையில், பே ஸ்லிப் இல்லாமல் வங்கியில் கடன் வாங்க முடியுமா, அதற்கு மாற்று வழிகள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பே ஸ்லிப் இல்லை என்றால் வங்கியில் கடன் கிடைக்காதா?

பே ஸ்லிப் என்பது உங்கள் வருமானத்தை உறுதி செய்யும் ஒரு அம்சம் மட்டுமே. அது உங்களிடம் இல்லை என்றாலும், உங்கள் வருமானத்தை நிரூபிக்க வேறு சில வழிகள் உள்ளன. அவற்றின் மூலம் நீங்கள் வங்கிகளில் எளிதாக கடன் பெறலாம்.

வங்கி பண பரிவர்த்தனை விவரம்

உங்களிட பே ஸ்லிப் இல்லை என்றால் உங்களது மூன்று முதல் 6 மாதங்களுக்கான வங்கி பண பரிவர்த்தனையை வங்கிகளிடம் வழங்கலாம். காரணம், பே ஸ்லிப் இல்லாதவர்களிடம் வங்கிகள் அடுத்தபடியாக பண பரிவர்த்தனை விவரங்களை தான் கேட்கும். எனவே, அந்த விவரத்தை சமர்ப்பிப்பதன் மூலம் வங்கிகள் உங்களுக்கு கடன் வழங்குவதை குறித்து யோசிக்கலாம்.

இதையும் படிங்க : உங்கள் மொத்த வருமானத்தையும் EMI குடித்துவிடுகிறதா?.. இந்த சில விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்!

தொழில் முனைவோர், சிறு வணிகர்களுக்கான அம்சங்கள்

நீங்கள் பெரிய தொழில் முனைவோராக இருந்தால் உங்களிடம் வருமான வரி தாக்கல் செய்தது தொடர்பான ஆவணங்களை கேட்பார்கள். இது பே ஸ்லிப்பை விட மிகவும் மதிப்புள்ளதாக கருதப்படும். இதுவே நீங்கள் இரு சிறு வியாபாரி என்றால் உங்கள் வருமானம் குறித்து தெரிந்துக்கொள்ள ஜிஎஸ்டி, இன்வாய்ஸ் மற்றும் நிதி அறிக்கைகளை கேட்கும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்கள் விநியோக அளவு அதிரடியாக உயர்வு.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

எனவே உங்களிடம் மாத வருமானத்தை உறுதி செய்யக்கூடிய பே ஸ்லிப் இல்லை என்றாலும், இந்த அம்சங்களை பயன்படுத்தி நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு
அதிகரிக்கும் போர் பதற்றம்.. 5 நாள் கெடு கொடுத்த அதிபர் டிரம்ப்..
"முன்பே வா" ரெய்னாவிற்கு மட்டுமல்ல.. தோனிக்கும் ரொம்ப பிடிக்கும்!.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த சுவாரசியம்!
ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் - துரந்தர் 2 படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்