ஒரே ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெறலாம்.. இந்த அசத்தல் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
Get Lifetime Pension In This LIC Scheme | பொதுமக்கள் நிதி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான சேமிப்பு மற்று முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இந்த நிலையில், ஒரே ஒருமுறை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெறக்கூடிய திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
மனிதர்களுக்கு தங்களது வாழ்நாள் முழுவதுமே நிதி தேவை இருந்துக்கொண்டே இருக்கும். இதற்காக அவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் நிதியை உருவாக்க தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. இளமை காலத்தில் வேலைக்கு சென்று பணத்தை சம்பாதிப்பது அவ்வளவு கடினமானதாக இருக்காது. ஆனால், முதுமை காலத்தில் அப்படி அல்ல. முதுமை காலத்தில் வருமானம் இல்லாததால் சில கடுமையான நிதி சவால்களை மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்படும். இதற்காக பல்வேறு முதலீட்டு திட்டங்கள் உள்ளன. அவற்றில் முதலீடு செய்வதன் மூலம் முதுமை காலம் நிதி பாதுகாப்பு உடையதாக மாறிவிடும். அத்தகைய திட்டம் ஒன்றை தான் எல்ஐசி வழங்குகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெறலாம் என கூறப்படுகிறது. அது என்ன திட்டம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜீவன் உத்சவ் சிங்கிள் பிரீமியம் திட்டம்
எல்ஐசி ஜனவரி 12, 2026 அன்று ஜீவன் உத்சவ் சிங்கிள் பிரீமியம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் பாலிசி தாரர் ஒரே ஒருமுறை மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும். இதன் காரணமாக பாலிசி தாரர், ஒவ்வொரு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ பிரீமியம் செலுத்த வேண்டிய தேவை இருக்கும். இதன் காரணமாக இந்த அம்சம் வழக்கமான வருமானம் இல்லாதவர்கள் மற்றும் பணி ஓய்வுக்கு பிறகு வருமானம் இல்லாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க : இண்டேன் கேஸ் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. கேஸ் சிலிண்டர்களை தொடர்ந்து பெற இது கட்டாயம்!
இந்த திட்டம் பங்குச்சந்தையுடன் தொடர்பில் இல்லாத திட்டம். அதன் காரணமாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தாலும் உங்களது முதலீட்டுக்கு எந்த வித சிக்கலும் ஏற்படாது. முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதே சமயம் வருமானமும் பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கான சிறந்த திட்டமாக இது உள்ளது. இந்த திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்கிறார் என்றால், அவரது வாழ்நாள் முழுவதுக்கும் இந்த திட்டம் பாதுகாப்பு வழங்கும். ஒருவேளை பாலிசிதாரர் எதிர்பாராத விதமாக உயிரிந்துவிட்டால் முன்கூட்டியே உறுதி செய்யப்பட்ட தொகை அவரின் குடும்பத்தினரிடம் வழங்கப்படும்.
இதையும் படிங்க : உங்கள் மொத்த வருமானத்தையும் EMI குடித்துவிடுகிறதா?.. இந்த சில விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்!
தனக்கு பிறகு தனது குடும்பம் நிதி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என நினைக்கும் பலருக்கும் இது சிறந்த தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.