PPF : ரூ.12,500 முதலீடு செய்து ரூ.40 லட்சம் பெறலாம்.. அசத்தம் அஞ்சலக பிபிஎஃப்.. முதலீடு செய்வது எப்படி?
Public Provident Fund Scheme | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி. இதில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.40 லட்சம் பெறுவது எப்படி என பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
பொதுமக்கள் தங்களது வருமானத்தை அப்படியே பத்திரப்படுத்தினால் அவர்களது வருமானம் பெருகாது என்றும், பணத்தை சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்வது தான் பணத்தை பாதுகாக்கவும், அதனை பல மடங்காக உயர்த்தவும் சிறந்த வழி என பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் தற்போது பல வகையான திட்டங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், ரூ.12,5000 முதலீடு செய்வதன் மூலம் ரூ.40,00,000 வரை வருமானம் பெறக்கூடிய அசத்தல் முதலீட்டு திட்டம் ஒன்று குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாதுகாப்புடன் கூடிய சிறந்த லாபத்தை வழங்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்
சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கும் சாமானியர்களின் முதன்மை தேர்வாக இருப்பது இந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான். இவை அரசியின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால், மிகுந்த பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களாக கருதப்படுகின்றன. அதுமட்டுமன்றி, இந்த திட்டங்களில் நிதி இழப்பு அபாயமும் மிக குறைவாகவே உள்ளது. இவற்றின் காரணமாக தான் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. அத்தகைய திட்டங்களில் ஒன்றில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.40,00,000 வரை சேமிப்பது எப்படி என பார்க்கலாம்.
இதையும் படிங்க : Post Office: தினமும் ரூ.411செலுத்தினால்… ரூ.43 லட்சம் சம்பாதிக்கலாம்… தபால் நிலைய சூப்பர் திட்டம்
ரூ.12,500 முதலீடு செய்வதன் மூலம் ரூ.40,00,000 பெறுவது எப்படி?
அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் ஒரு அசத்தலான திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF – Public Provident Fund). இந்த திட்டத்திற்கு தற்போது 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்யும் பட்சத்தில் உங்களால் சிறந்த லாபத்தை பெற முடியும். இந்த திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன்படி, 15 ஆண்டுகளில் ரூ.22.5 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், வட்டியாக மட்டுமே ரூ.18.18 லட்சம் வழங்கப்படும்.
இதையும் படிங்க : போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமான திட்டம் – மாதம் ரூ.5,550 பெறும் வாய்ப்பு – எப்படி முதலீடு செய்வது?
இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.22.5 லட்சம் மற்றும் அதன் வட்டி ரூ.18.18 லட்சம் ஆகிய சேர்த்து மொத்தமாக ரூ.40 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.