உலகின் மிகவும் மதிப்பு குறைந்த நாணயங்கள்.. இந்த நாடுகளில் இந்திய ரூபாய் ராஜா!
World's 5 Lowest-Value Currencies | உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென தனி நாயணயங்களை பயன்படுத்தும். அந்த வகையில், உலக அளவில் மிக குறைந்த மதிப்பு கொண்ட ஐந்து நாடுகளின் நாணயங்கள் குறித்தும், இந்திய மதிப்புடன் ஒப்பிடுகையில் அவை எவ்வளவு குறைவாக உள்ளன என்றும் விரிவாக பார்க்கலாம்.

கோப்பு புகைப்படம்
ஒரு நாடு தனியாக ஆட்சி செலுத்த வேண்டும் என்றால் அந்த நாட்டுக்கென சில முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும். அத்தகைய அம்சங்களில் ஒன்றுதான் நாணயம். உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தனக்கென தனி நாணயத்தை வைத்திருக்கும். அது ஒன்றைவிட ஒன்று முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். அதாவது ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு குறைவாக இருந்தால், மற்றொரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு அதிகமானதாக இருக்கும். இந்த நிலையில், உலக அளவில் குறைந்த மதிப்பு கொண்ட இந்தோனேசியா உள்ளிட்ட 5 நாடுகளின் நாணயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மிக குறைவான மதிப்பு கொண்ட நாணயங்கள்
ஈரானியன் ரியல்
உலகின் மிகவும் மதிப்பு குறைந்த நாணயமாக ஈரானியன் ரியல் உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்திய ஒரு ரூபாய் 490 முதல் 500 ரியல் மதிப்பாக உள்ளது. அசாதாரனமான சூழல், பண வீக்கம் உள்ளிட்ட காரணங்கள் காரணமாக ஈரானியன் ரியல் இவ்வளவு மதிப்பு குறைந்ததாக உள்ளது. இந்த நிலையில் தான் ஈரானியன் ரியலுக்கு பதிலாக டோமன் பயன்படுதத முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு டோமன் 10 ரியலுக்கு சமம்.
வியட்னாமீஸ் டாங்க்
வியட்னாமீஸ் டாங்கும் உலகின் மிகவும் மதிப்பு குறைந்த நாணயங்களில் ஒன்றாக உள்ளது. இந்திய ஒரு ரூபாய், 300 வியட்னாமீஸ் டாங்குக்கு சமம் ஆகும். பிற நாடுகள் வியட்னாமீஸ் பொருட்களை மிக குறைந்த விலையில் வாங்வதற்கான அந்த நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் அங்கு வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கடும் உயர்வுக்கு மத்தியில் சற்று குறைந்த தங்கம் விலை.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?
இந்தோனேசிய ரூபியா
இந்தோனேசிய ரூபியாவும் மிகவும் மதிப்பு குறைந்த நாணயங்களில் ஒன்றாக உள்ளது. அது இந்திய ஒரு ரூபாய்க்கு 185 முதல் 190 இந்தோனேசிய ரூபியாவுக்கு சமம் ஆகும். இந்தோனேசியாவின் பொருளாதாரம் உறுதியானதாக இருந்தாலும் உலக வர்த்தகம் உள்ளிட்ட காரணிகள் இந்தோனேசிய நாணயத்தின் குறைந்த மதிப்புக்கு காரணமாக உள்ளது.
லாவோட்டின் கிப்
லாவோஸின் நாணயமான கிப் உலகின் மிகவும் மதிப்பு குறைந்த நாணயங்களில் ஒன்றாக உள்ளது. வளர்த்து வரும் இந்த நாட்டின் பொருளாதாரம் விவசாயம் மற்றும் ஹைட்ரோபவரை நம்பியுள்ளது. இந்திய ஒரு ரூபாய் லாவோஸின் 250 முதல் 260 கிப்புக்கு சமமாக உள்ளது.
இதையும் படிங்க : GST : தீபாவளி பரிசாக குறையும் ஜிஎஸ்டி?.. பிரதமரின் அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்த நிதி அமைச்சகம்!
குனியா பிராங்க்
குனியாவில் இருப்பு உள்ளிட்ட வளங்கள் மிக அதிகமாக இருந்தாலும், உலக அளவில் மிக குறைந்த மதிப்பு கொண்ட நாணயங்களில் ஒன்றாக இது உள்ளது. இந்தியாவின் ஒரு ரூயாக்கு 100 குனியா பிராங்க் சமமாகும்.