பொங்கல் பரிசை பெறாதவர்கள் என்ன செய்யலாம்?.. கடைசி தேதி என்ன?

2026 Pongal Gift and Money | 2026 ஆம் ஆண்டுக்கு ரூ.3,000 ரொக்க பணம், அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட சிறப்பு பொருட்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அரிசு அட்டை தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசை பெறாதவர்கள் என்ன செய்யலாம்?.. கடைசி தேதி என்ன?

மாதிரி புகைப்படம்

Published: 

12 Jan 2026 12:25 PM

 IST

தமிழகத்தில் விரைவில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பொங்கல் பரிசை அறிவித்துள்ளது. அதாவது, 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரூ.3,000 ரொக்க பணம் மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகிய பொருட்களை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த பொங்கல் சிறப்பு பரிசு மற்றும் சிறப்பு தொகை அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் என கூறியது. அதன்படி, பொங்கல் பரிசு வழங்கும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

டோக்கன்கள் வழங்கப்பட்டு விநியோகம் செய்யப்படும் பொங்கல் பரிசு

இந்த பொங்கல் பரிசு மற்றும் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அந்த டோக்கன்களில் எந்த தேதியில் அவர்கள் பொங்கல் பரிசை வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி, ஜனவரி 08, 2026 முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பரிசு வாங்க கடைசி தேதி எது, பொங்கல் சிறப்பு பரிசு வாங்காதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் மற்றும் சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.

இதையும் படிங்க : வீட்டுக் கடன் அடைத்து முடிக்கும்போது கையில் பணம் இருக்க வேண்டுமா?.. இந்த ஒரு டிரிக்ஸ் ஃபாலோ பண்ணா போதும்!

பொங்கல் பரிசு வாங்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

பொங்கல் பரிசை அரசு வழங்கி வரும் நிலையில், அதற்கான கடைசி தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. இதற்காக ஜனவரி 18, 2026 வரை பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஜனவரி 13, 2026 மற்றும் ஜனவரி 14, 2026 ஆகிய தேதிகளில் பொங்கல் சிறப்பு பரிசு வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : உங்களுக்கு முறையாக ஊதியம், இன்சன்டிவ் வழங்கப்படவில்லையா?.. அப்போ இத பண்ணுங்க!

பொங்கல் பண்டிகை அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் பொங்கல் பரிசை பெறும் வகையில் இந்த ஆண்டும் ஜனவரி 18, 2026 வரை வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கபப்டுகிறது குறிப்பிடத்தகக்து.

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!