Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரூ.20,000 முதலீடு செய்தால் மாதம் ரூ.20 லட்சம் கிடைக்குமா? நிதியமைச்சர் பெயரில் போலி வீடியோ

Scam Alert: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயரில் ரூ.20,000 முதலீடு செய்தால் மாதம் ரூ.20 லட்சம் வரை லாபம் பெறலாம் என்று ஒரு வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ரூ.20,000 முதலீடு செய்தால் மாதம் ரூ.20 லட்சம் கிடைக்குமா? நிதியமைச்சர் பெயரில் போலி வீடியோ
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Aug 2025 12:41 PM

சமூக ஊடங்களில் கடந்த சில நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ( Nirmala Sitharaman) ஒரு முதலீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்த திட்டத்தில் ரூ.20,000 முதலீடு (Investment) செய்தால் மாதம் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை லாபம் பெறலாம் என்று அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் மத்திய நதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயர் மற்றும் போட்டோ இடம்பெற்றிருந்தது.  இதனை உண்மை என நம்பி மக்கள் தங்கள் வாட்ஸ்அப் குரூப்களில் ஃபார்வேர்டு செய்யத் தொடங்கினார். நாடு முழுவதும் இந்த தகவல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அரசின் மக்கள் தகவல் தொடர்பு இயக்ககம் இந்த தகவல் போலியான தெரிவித்துள்ளது.

வைரலான வீடியோவில் சொல்லப்பட்டது என்ன ?

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மத்திய நிதியமைச்சகத்தின் புதிய திட்டம் என்ற பெயரில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் குவாண்டம்ஏஐ என்ற ஸ்மார்ட் டிரேடிங் ஃபிளாட்ஃபார்மில் ரூ.21,000 முதல் 22,000 வரை முதலீடு செய்தால், ஒரு நாளைக்கு ரூ.60,000 வரை வருமானம் பெறலாம் எனவும் மாதம் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரை சம்பாதிக்கலாம் எனவும் கூறப்பட்டது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் இந்த வீடியோ அதிகம் பரவியது. இதனால் மக்கள் சைபர் மோசடிக்குள்ளாகும் அபாயம் அதிகரித்தது. குறிப்பாக அந்த வீடியோவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயர் மற்றும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

இதனையும் படிக்க : பழைய கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்ய போகிறீர்களா?.. அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!

மத்திய அரசு விளக்கம்

 

இந்த திட்டம் முற்றிலும் போலியானது எனவும் நிதியமைச்சர் அல்லது மத்திய அரசு இவ்விதமான எந்த திட்டத்தையும் அறிமுகப்படுத்தவோ அல்லது  ஆதரிக்கவோ இல்லை எனவும் பத்திரிகை தகவல் தொடர்பு இயக்கத்தின் உண்மை கண்டறியும் குழு விளக்கமளித்துள்ளது. மேலும் பொதுமக்களை தவறாக  வழிநடத்தி, மக்களின் மோசடி கும்பலின் வலையில் சிக்க வைக்க உருவாக்கப்பட்டைவை, இந்த மோசடியில் மக்கள் சிக்கி ஏமாறக்கூடாது என தெரிவித்துள்ளது.

சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரையுலக பிரபலங்கள், அரசியல் வாதிகள் ஆகியோர் பெயரில் போலி வீடியோக்கள் உருவாக்கி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இது மிகவும் துல்லியமாக, நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்படுவாதால் மக்கள் அதனை உண்மை என நம்பி மோசடியில் சிக்கி வருகின்றனர்.

இதையும் படிக்க : ஆண்களை விட பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள்?.. உண்மை இதுதான்!

முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

இந்த நிலையில் இந்த மோசடியில் சிக்காமல் இருக்க சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளனர். எந்த முதலீட்டு திட்டங்களும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தளங்கள் மற்றும் நம்பகமான நிதி நிறுவனங்களில் இருந்து வந்தால் மட்டுமே நம்ப வேண்டும். குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் திட்டங்களையும் உடனடியாக நம்பி முதலீடு செய்ய வேண்டாம். குறிப்பாக சரிபார்க்கப்படாத இணைய தளங்களில் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி விவரங்களை பகிரக் கூடாது.