UPI New Limit : யுபிஐ-ல் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. இந்த வரம்புகள் எல்லாம் மாறுது!

UPI Transaction Limits Will Increase | இந்தியாவில் ஏராளமான பொதுமக்கள் அன்றாட பண பரிவர்த்தனை தேவைகளுக்காக யுபிஐ செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், செப்டம்பர் 15, 2025 முதல் யுபிஐ பண பரிவர்த்தனை வரம்பில் முக்கிய மாற்றம் வர உள்ளது.

UPI New Limit : யுபிஐ-ல் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. இந்த வரம்புகள் எல்லாம் மாறுது!

மாதிரி புகைப்படம்

Updated On: 

07 Sep 2025 15:14 PM

 IST

யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு வரம்பு உள்ள நிலையில், அதில் முக்கிய சில மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. செப்டம்பர் 15, 2025 முதல் இந்த புதிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. யுபிஐ பண பரிவர்த்தனை (UPI Money Transaction) முறையில் இந்த மாற்றம் அமலுக்கு வர இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், யுபிஐ பண பரிவர்த்தனை வரம்பில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் யுபிஐ சேவை

வங்கிகள், ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மையங்களுக்கு செல்லாமல் மிக சுலபமாக ஆன்லைன் மூலம் ஒருவருக்கு எளிதாக பணம் அனுப்ப பயன்படுத்தப்படும் சேவை தான் யுபிஐ. இந்த அம்சத்தை பயன்படுத்தி மிக எளிதாகவும், விரைவாகவும் பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதால் பலரும் இந்த சேவையை தங்களாது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பரவலாக பயன்படுத்தும் இந்த சேவையில் ஒரு நாளைக்கு எவ்வளவு பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்ற வரம்பு உள்ளது. தற்போது அதில் தான் மாற்றம் வர உள்ளது.

இதையும் படிங்க : சிறு வணிகர்கள் ரூ.90,000 வரை கடன் பெறலாம் – மத்திய அரசின் திட்டம் – எப்படி விண்ணப்பிப்பது?

செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்

கிரெடிட் கார்டு பில் வரம்பு

கிரெடிட் கார்டு பில் வரம்பை பொருத்தவரை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரை பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதேபோல ஒரு நாளைக்கு ரூ.6 லட்சம் வரை பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

கடன் மற்றும் மாத தவணை

கடன் மற்றும் மாத தவணைகளுக்கு  ரூ.5 லட்சம் வரை ஒரு பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதேபோல ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் வரை பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

சந்தை முதலீடுகள் மற்றும் காப்பீடுகள்

சந்தை முதலீடுகள் மற்றும் காப்பீடுகளுக்கான முந்தைய வரம்பு ரூ.2 லட்சமாக இருந்தது. புதிய வரம்பின் படி, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரை பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதேபோல ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் வரை பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

இதையும் படிங்க : வருமான வரி தாக்கல் கடைசி தேதி நீட்டிப்புக்காக காத்திருக்காதீர்கள்.. எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்.. காரணம் என்ன?

பயணத்துறை

ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரை பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

வரி செலுத்துவது

வரி செலுத்துவதுவதற்கான ஒரு பரிவர்த்தனைக்கு முந்தைய வரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது. இதன் புதிய வரம்பு தற்போது ரூ.5 லட்சமாக உள்ளது.

வங்கி சேவைகள்

டிஜிட்டல் ஆன்போர்டிங் மூலம் ஒரு பரிவர்த்தனைக்கு மற்றும் ஒரு நாளுக்கு ரூ.5 லட்சம் வரை பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதன் முந்தைய வரம்பு ரூ.2 லட்சமாக இருந்தது.

Related Stories
PPF : ரூ.12,500 முதலீடு செய்து ரூ.40 லட்சம் பெறலாம்.. அசத்தம் அஞ்சலக பிபிஎஃப்.. முதலீடு செய்வது எப்படி?
Gold Price : இன்னும் 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை எவ்வளவாக இருக்கும்?.. நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்!
ஜிஎஸ்டி குறைப்பு… 40 இஞ்ச் டிவி மற்றும் 1.5 டன் ஏசியின் விலை எவ்வளவு குறையும்?
Credit Card : கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா?.. இந்த தவறை செய்யாதீர்கள்.. வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்!
குறையும் கார்களின் விலை… கார் லோனுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் வங்கிகள் – எது சிறந்தது?
வீடு கட்ட போறீங்களா.. குட் நியூஸ்.. அதிரடியாக விலை குறையப்போகும் கட்டுமன பொருட்களின் விலை!