UPI : யுபிஐ-ல் பயோமெட்ரிக் மூலம் பண பரிவர்த்தனை?.. விரைவில் அமலுக்கு வரும் புதிய அம்சம்?

Biometric in UPI Payments | இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ செயலிகளை தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு யுபிஐ செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்ய பின் எண் பயன்படுத்தப்படும் நிலையில், விரைவில் கைரேகை மற்றும் முக அடையாள வசதிகள் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

UPI : யுபிஐ-ல் பயோமெட்ரிக் மூலம் பண பரிவர்த்தனை?.. விரைவில் அமலுக்கு வரும் புதிய அம்சம்?

மாதிரி புகைப்படம்

Published: 

30 Jul 2025 11:53 AM

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ (UPI – Unified Payment Interface) சேவையை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பொதுமக்கள் பயன்படுத்து யுபிஐ செயலிகளில் பின் எண்ணை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யப்பட்டு வரும் நிலையில், பயோமெட்ரிக் தகவல்கள் (Biometric Details) மூலம் யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI – National Payment Corporation of India) விரைவில் அமலுக்கு கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் யுபிஐ சேவை

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் யுபிஐ சேவையை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஒருவர் மற்றொருவருக்கு மிக விரைவாக பணம் செலுத்த முடியும் என்பதால் பெரும்பாலான மக்களுக்கு இது மிக எளிய தேர்வாக உள்ளது. இந்தியாவை பொருத்தவரை சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரையும், சிறிய கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை என பல இடங்களிலும் யுபிஐ சேவை பயன்பாட்டில் உள்ளது. இவ்வாறு இந்தியாவில் யுபிஐ சேவையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் தான் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : UPI : பேலன்ஸ் செக் முதல் ஆட்டோ டெபிட் வரை.. ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

பயோமெட்ரிக் விவரங்களுடம் யுபிஐ பண பரிவர்த்தனை செய்யலாம்

தற்போது யுபிஐ-ல் பணி பரிவர்த்தனை செய்ய பின் எண் பயன்படுத்தப்படும் நிலையில், அதனை தவிர்த்து கைரேகை மற்றும் முக அடையாள வசதிகளுடன் பண பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பண பரிவர்த்தனை யுபிஐ மூலம் நடைபெறுகிறது. இந்த நிலையில், ஒருவர் தனது யுபிஐ பின் எண்ணை மறந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அதன் மூலம் மோசடி நடைபெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : Fixed Deposit : 3 முறை ரெப்போ வட்டியை குறைத்த ஆர்பிஐ.. இருப்பினும் FD திட்டங்களுக்கு 8.5% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

இதன் காரணமாக யுபிஐ-ல் மோசடிகள் நடைபெறாமல் தடுப்பதற்கு பயோமெட்ரிக் முறை சிறந்த தேர்வாக இருக்கும் என கூறப்படுகிறது. பின் எண்ணை விட பயோமெட்ரிக் தகவல்களை பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், விரைவில் இந்த அம்சம் கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகளில் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.