உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.10,000 கோடி – பிஎஃப் தொகையை பெறுவது எப்படி?

Unclaimed EPF Amount : இந்தியாவில் இதுவரை பழைய பிஎஃப் கணக்குகளில் உரிமை கோரப்படாமல் ரூ.10,000 கோடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர்கள் வேலை மாறும்போது புதிய பிஎஃப் கணக்கு தொடங்கப்படுவதால் இந்த பிரச்னை உருவாவதாக கூறப்படுகிறது. இந்த பிஎஃப் தொகையை பெறுவது எப்படி என பார்க்கலாம்.

உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.10,000 கோடி - பிஎஃப் தொகையை பெறுவது எப்படி?

மாதிரி புகைப்படம்

Published: 

10 Apr 2026 20:22 PM

 IST

இந்தியாவில் தொழிலாளர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதற்காக பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (EPFO) செயல்பட்டு வருகிறது. இதன் படி மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை ஊழியரின் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும், அதே போல நாம் பணியாற்றும் நிறுவனமும் அதே அளவு தொகையை பிஎஃப் கணக்கில் செலுத்தும். இந்த தொகையை ஆபத்து காலங்களில் நாம் எடுத்து பயன்படுத்த முடியும். பொதுவாக நாம் ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவணத்துக்கு மாறும்போது பிஎஃப் கணக்கு மாற்றப்படும். இதனால் முந்தைய நிறுவனத்தில் தொடங்கப்பட்ட பிஎஃப் கணக்கை, புதிய பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட வேண்டும். அப்படி இணைக்கவில்லை என்றால், பழைய பிஎஃப் கணக்கில் உள்ள தொகை அப்படியே இருக்கும்.

உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.10,000 கோடி

அப்படி பயன்படுத்தப்படாமல் இறுக்கும் இபிஎஃப் கணக்கில் இருந்து சேமிப்பு தொகை ரூ.10,000 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலை மாற்றிய பிறகு பழைய பிஎஃப் கணககுகளில் உள்ள தொழிலாளர்களின் ஓய்வூதிய சேமிப்பு தொகை அப்படியே முடங்கிக் கிடைக்கிறது. இந்தியாவில் தற்போது 31.87 லட்சம் செயல்பாட கணக்குகளில் மட்டும் ரூ.10,915 கோடி தொகை உல்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் மிக வேகமாக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க : அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலை உயருமா? என்ன நடக்கும்?

ஒரு பிஎஃப் கணக்கு 3 ஆண்டுகள் வரை எந்த பரிவர்த்தனையும் நடைபெறாமல் இருந்தால் அது செயல்படாத கணக்கு என வைகப்படுத்தப்படுகிறது. கடந்த 2020 ஆண்டில் 9.8 லட்சம் பிஎஃப் கணக்குகள் செயல்படாமல் இருந்துள்ளன. 2025 ஆம் ஆண்டின் படி அந்த எண்ணிக்கை 31.9 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது 5 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்ந்துள்ளது.

இபிஎஃப்ஓ பல பிஎஃப் கணக்குகளை ஒன்றாக இணைக்க யுஏஎன் என்ற எண் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாம் வேலை மாறினாலும், பழைய பிஎஃப் தொகையை எளிதாக மாற்றிக்கொள்ளலாம். ஆன்லனில் நம் பிஎஃப் கணக்கை கண்காணிக்க முடியும். நம் பழைய கணக்குகளில் யுஏஎன் எண் இணைக்கப்படவில்லை என்றால் நம் பிஎஃப் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

மேலும் பலர் புதிய வேலைக்கு செல்லும்போது பழைய பிஎஃப் தொகையை மாற்ற மறக்கிறார்கள். இதனால் பல சிறு கணக்குகள் உருவாகின்றன. சிறிய அளவிலான கணக்குகளில் அதிக அளவிலான தொகை சிக்கிக் கொள்ள இது காரணமாக அமைகின்றன.

இதையும் படிக்க : கிரெடிட் கார்டு.. தேவையில்லாத கட்டணங்களை தவிர்ப்பது எப்படி?

பழைய கணக்குகளில் உள்ள பிஎஃப் தொகையை திரும்ப பெறுவது எப்படி?

இதற்காக முதலில் EPFO Member Portalக்கு செல்லவும். பின்னர் UAN login செய்யவும். எத்தனை PF கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளன பாருங்கள். KYC சரிபார்க்கவும். உங்கள் ஆதார், பான் கார்டு, வங்கி கணக்கு சரியாக உள்ளதா என பார்க்கவும். பின்னர் பழைய கணக்குகளை மெர்ஜ் செய்யவும். இதன் மூலம் பழைய பிஎஃப் தொகையை புதிய கணக்கிற்கு மாற்றலாம். இதில் சிக்கல் இருந்தால் இபிஎஃப்ஓ அலுவலகத்திற்கு நேரடியாக செல்லலாம்.

.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?