ஆதார் கார்டில் பெயர், முகவரியை திருத்த நிபந்தனை.. UIDAI கூறுவது என்ன?

UIDAI New Restrictions In Aadhaar Card | இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் கார்டில் பெயர் மற்றும் முகவரியை மாற்றுவது தொடர்பான சில நிபந்தனைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், UIDAI அறிமுகம் செய்துள்ள புதிய நிபந்தனைகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதார் கார்டில் பெயர், முகவரியை திருத்த நிபந்தனை.. UIDAI கூறுவது என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

09 Mar 2026 14:55 PM

 IST

இந்தியாவில் இந்தியர்களுக்கான மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. ஒரு தனிமனிதரின் வாழ்க்கையில் ஆதார் கார்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக ஒரு குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல்,  முதியோர் உதவித் தொகை வாங்குவது வரை என பல தேவைகளுக்கு ஆதார் கட்டாயமாக உள்ளது. இத்தகைய மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ள நிலையில், அது குறித்த புதிய புதிய அறிவிப்புகள் வெளியாகும். அந்த வகையில், ஆதார் கார்டில் பெயர் மற்றும் பிறந்த தேதியை மாற்றுவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியர்களுக்கு மிக முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டு

இந்திய குடிமக்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI – Unique Identification Authority Of India) வழங்கப்படும் முக்கிய அடையாள ஆவணம் தான் ஆதார் கார்டு. இதில் 12 இலக்க எண், ஒருவரின் பெயர், முகவரி உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். ஆதார் கார்டில் இருக்கும் விவரங்கள் மற்ற முக்கிய விவரங்களான பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் ஒத்துப்போக வேண்டியது அவசியமாக உள்ளது. இதன் காரணமாக ஆதார் கார்டில் ஏதேனும் பிழை இருந்தால் அதனை உடனே சரிசெய்ய வேண்டிய கட்டாயமும் உள்ளது. இந்த நிலையில், தான் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : வீட்டில் இருந்தே சுலபமாக ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.. எப்படி தெரியுமா?

பெயர், முகவரியை மாற்றம் செய்ய நிபந்தனைகள்

இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் கார்டில் ஒருவர் தனது பெயரை 2 முறை மட்டுமே திருத்த முடியும் என்றும், பிறந்த தேதியை ஒருமுறை மட்டுமே திருத்த முடியும் என்று கூறியுள்ளது. ஆனால், முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம், அதற்கான நிபந்தனைகள் எதுவும் இல்லை என கூறியுள்ளது.

இதையும் படிங்க : ஈரான் போரால் தள்ளுபடி விலையில் தங்கத்தை விற்கும் துபாய்.. இந்தியாவுக்கு பாதிப்பா?

இந்த திருத்தங்களை மேற்கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது பிறப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயமாக உள்ளன. எனவே பொதுமக்கள் இந்த விவரங்களை மாற்றுவது குறித்து கவனமுடன் செயல்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..