பெண்களுக்கு அதிக லாபம் தரும் அசத்தல் திட்டங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Schemes For Women | பொதுமக்கள் முதலீடு செய்வதற்காக ஏராளமான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், பெண்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய பாதுகாப்பான சில திட்டங்கள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

பெண்களுக்கு அதிக லாபம் தரும் அசத்தல் திட்டங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

16 Mar 2026 22:30 PM

 IST

சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்து அதனை பல மடங்காக உயர்த்தி பொருளாதார பாதுகாப்பு பெறுவதற்கு ஏராளமான திட்டங்கள் அமலில் உள்ளன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். அந்த வகையில், பெண்களுக்கான ஒருசில சிறந்த திட்டங்கள் உள்ளன. அவை எந்த எந்த திட்டங்கள், அவற்றில் முதலீடு செய்வதன் மூலம் என்ன என்ன சிறப்பு அம்சங்கள் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண்களுக்கான முதலீட்டு திட்டங்கள்

முதலீடு செய்து பணத்தை அதிகமாக உயர்த்துவதற்கு பல்வேறு திட்டங்கள் உள்ளன. அவற்றில் பெண்களுக்கான திட்டங்கள் இவை தான்.

பெண்களுக்கான சிறப்பு நிலையான வைப்பு நிதி திட்டம்

நீங்கள் எந்த வித சிக்கலும் இல்லாமல் நீங்கள் முதலீடு செய்யும் பணம் நன்கு வளர்ச்சி அடைய வேண்டும் என விரும்பினால் பெண்களுக்கான சிறப்பு நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டத்தில்  முதலீடு செய்யுங்கள். காரணம், பல வங்கிகள் சாதாரண எஃப்டி திட்டங்களை விடவும் பெண்களுக்கான திட்டங்களுக்கு கூடுதலாக 0.25 சதவீதம் வட்டி வழங்குகின்றன. இதுவே 60 வயதுக்கு மேற்பட்ட பெண் என்றால் கூடுதலாக 0.50 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

இதையும் படிங்க : PPF முதல் SSY வரை.. முதலீடு செய்து அதிக லாபம் பெற உதவும் திட்டங்கள்.. லிட்ஸ் இதோ!

நீண்ட கால லாபத்திற்கு எஸ்ஐபி முதலீடு

மாதம் தோறும் சிறிய தொகையை முதலீடு செய்து வரும் காலத்தில் பெரிய தொகையை உருவாக்க நினைக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு எஸ்ஐபி (SIP – Systematic Investment Plan) சிறந்ததாக இருக்கும். அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்டில் உள்ள எஸ்ஐபி உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். காரணம், இந்த திட்டத்தில் நீண்ட காலத்திற்கு சிறிய தொகையை முதலீடு செய்து பெரிய லாபத்தை பெற முடியும்.

இதையும் படிங்க : ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் அதிரடி பரி மாற்றங்கள்.. முழு விவரம் இதோ!

அரசு உத்தரவாதத்துடன் கூடிய என்எஸ்சி

மத்திய அரசு பாதுகாப்பான மற்றும் நீண்ட கால சேமிப்பு திட்டமான தேசிய சேமிப்பு சான்றிதழ் (NCS – National Saving Certificate) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 முதல் 10 ஆண்டுகளாக உள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு 7.7 சதவீதம் வட்டி பெற முடியும்.

Follow Us
100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கிய கடனை திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
பிறந்த குழந்தையை கையில் வாங்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தந்தை - வைரலாகும் வீடியோ
காமிகாஸ் டிரோன் படகுகளை பயன்படுத்தி எண்ணெய் கப்பல்களை தாக்கும் ஈரான்
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததால் சரச்சை - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கம்