உங்கள் ITR Refund கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதா?.. அப்போ உடனே இத பண்ணுங்க!

Income Tax Refund Rejection Reasons | 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்த நபர்கள் அதற்கான ரீஃப்ண்ட் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், பலருக்கும் வருமான வரி ரீஃப்ண்ட் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

உங்கள் ITR Refund கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதா?.. அப்போ உடனே இத பண்ணுங்க!

மாதிரி புகைப்படம்

Updated On: 

26 Sep 2025 12:35 PM

 IST

2024 – 2025 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் (2024 – 2025 ITR Filing) செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 16, 2025 உடன் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் வருமான வரி ரீஃபண்ட் (Income Tax Refund) எப்போது வரும் என வரி செலுத்திய நபர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில், வருமான வரி ரீஃப்ண்ட் கோரிக்கை நிரகாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான முக்கிய காரணங்கள் என்ன, மீண்டும் வருமான வரி ரீஃப்ண்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2024 – 2025 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல்

2024 – 2025 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 30, 2025 அன்று கடைசி தேதியாக வருமான வரித்துறை அறிவித்தது. ஆனால், அன்றை தேதிக்குள் பெரும்பாலான பொதுமக்கள் வருமான வரி செலுத்தாததால் செப்டம்பர் 15, 2025 ஆன்று வரை வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறகு தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக மேலும்  ஒருநாள் நீட்டிக்கப்பட்டது. அதாவது செப்டம்பர் 16, 2025 வரை நீட்டிக்கப்பட்டது.

இதையும் படிங்க : UPI : யுபிஐ-ல் நவம்பர் 3 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?

செப்டம்பர் 16, 2025 ஆம் தேதிக்குள் வருமான வரி செலுத்திய நபர்கள், வருமான வரி ரீஃபண்டுக்காக எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், பெரும்பாலான நபர்களுக்கு வருமான வரி ரீப்ஃண்டு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் குழப்பமடைந்துள்ளனர். இந்த நிலையில், வருமான வரி ரீப்ஃண்டு கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன, மீண்டும் ரீப்ஃண்டு கோரி விண்ணப்பிப்பது எப்படி என பார்க்கலாம்.

இதையும் படிங்க : வீட்டில் இருந்தே சேவைகளை பெற வந்தாச்சு mAadhaar செயலி.. பதிவிறக்கம் செய்வது எப்படி?

வருமான வரி ரீப்ஃண்டு கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்கள்

வருமான வரி ரீஃபண்ட் கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு வங்கி கணக்கு விவரங்கள் தவறாக இருப்பது, பான் – ஆதார் லிங் செய்யாமல் இருப்பது உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. முந்தைய ஆண்டுக்கான வருமான வரி ரீஃப்ண்ட் பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தாலும் இவ்வாறு வருமான ரீஃப்ண்ட் நிராகரிக்கப்படுபதற்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளன.

வருமான வரி ரீப்ஃண்டு கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம்

எனவே வங்கி கணக்கு விவரங்கள், ஆதார் – பான் லிங் சிக்கல் ஆகியவற்றின் காரணமாக வருமான வரி ரீஃபண்ட் கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில் வருமான வரி செலுத்தும் நபர்கள் உடனடியாக இ வெரிஃபிகேஷன் (e Verification) மூலம் அந்த சிக்கல்களை சரிசெய்ய வேண்டும். பிறகு மீண்டும் வருமான வரி ரீஃப்ண்ட் கோரி விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.