வீட்டுக்கடனுக்கு வட்டியை தவிர்க்க வேண்டுமா? கைகொடுக்கும் SIP முதலீடு – எப்படி தெரியுமா?

Interest Free Loan : இந்தியாவில் வீடு கட்டுவது என்பது பலரின் கனவு. ஆனால் வீட்டுக்கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி மிகப்பெரிய சுமையாக இருக்கிறது. இந்த நிலையில் அந்த சுமையை SIP திட்டம் வெகுவாக குறைக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வீட்டுக்கடனுக்கு வட்டியை தவிர்க்க வேண்டுமா?  கைகொடுக்கும் SIP முதலீடு - எப்படி தெரியுமா?

Smart Sip Strategy

Published: 

02 Apr 2026 19:35 PM

 IST

வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது என்பது இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களின் கனவு. ஆனால் வீட்டுக் கடன் வாங்கினால், கடன் தொகையை விட அதிகமாக வட்டி கட்ட வேண்டிய நிலை மக்களிடையே கவலையை அதிகரித்துள்ளது. உதாரணமாக ரூ.50 லட்சம் வீட்டு கடனை 20 ஆண்டுகளுக்கு வாங்கியிருந்தால், கிட்டத்தட்ட ரூ.54 லட்சம் வரை வட்டியாக செலுத்த வேண்டியிருக்கும். அதாவது மொத்தமாக நாம் கடன் வாங்கிய வங்கிக்கு ரூ.1 கோடியை வட்டியாக செலுத்த வேண்டி வரும். இது சாமானிய மக்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய நிதி அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் மாதத் தவணையை செலுத்த முடியாமல் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.

வீட்டுக்கடனுக்கு வட்டியை தவிர்க்க வேண்டுமா?

இந்த நிலையில் இந்த பிரச்னைகளை சமாளிக்க முதலீட்டு திட்டங்களை பயன்படுத்தி இந்த வட்டி சுமையில் இருந்து விடுபடலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதாவது வீட்டுக் கடனுக்கு நாம் செலுத்தும் மாதத் தவணையில் 10 சதவிகிதத்தை சிப் (Systematic Investment Plan) திட்டத்தில் முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் கிடைக்கும் வருமானம் நீங்கள் செலுத்தும் வட்டியை விட அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க : இனி இந்த பண பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாம்.. பான் கார்டு விண்ணப்பத்திலும் மாற்றம்!

உதாரணமாக வீட்டுக்கடனுக்காக மாதம் ரூ.43, 550 மாதத் தவணை செலுத்தும் நபர் ஒருவர், அதில் 10 சதவிகிதமான ரூ.4,500 அளவுக்கு சிப் திட்டத்தில் முதலீடு செய்தால் 20 ஆண்டுகளில் மிகப்பெரிய தொகை கிடைக்கும். இதன் மூலம் 20 ஆண்டுகளில் சுமார் ரூ.68.22 லட்சம் லாபம் கிடைக்கும். குறிப்பாக நாம் முதலீடு செய்திருப்பது வெறும் ரூ.10.80 லட்சம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதன் படி மீதம் ரூ.57 லட்சம் அளவுக்கு நமக்கு லாபம் கிடைக்கும்.

இதனால் வீட்டுக் கடன் வாங்கியவர்கள், சிப் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வீட்டுக் கடனுக்கு நாம் செலுத்தும் வட்டியை ஈடுகட்ட முடியும். இதனால் உங்களுக்கு வட்டி இல்லாத கடனை போல மாறும். ஆனால் இந்த முதலீடு நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக செய்யப்பட வேண்டும். மேலும் நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை தேர்வு செய்வது மிகவும் முக்கியம். சந்தை மாற்றங்களை கருத்தில் கொண்டு முதலீடு செய்தால் மட்டும் நமக்கு முழு பலன் கிடைக்கும்.

இதையும் படிக்க : சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. அரசு அறிவிப்பு!

இந்த நிலையில் மாதத் தவணை செலுத்துவதற்கு பதிலாக அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் கடன் சுமை நமக்கு குறைந்து அதே நேரத்தில் நமக்கு லாபமும் அதிகரிக்க முடியும் என்பது மக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். ஆனால் அதில் சரியான திட்டங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.

 

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..