ஏடிஎம் கார்டு இல்லாமலே UPI பின் செட் செய்யலாம்.. எப்படி தெரியுமா?

Set UPI Pin Without ATM Card | யுபிஐ கணக்கில் பின் செட் செய்ய ஏடிஎம் கார்டு கட்டாயம் என பலர் நினைக்கின்றனர். ஆனால், ஏடிஎம் கார்டு இல்லாமலே யுபிஐ பின் செட் செய்ய முடியும். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏடிஎம் கார்டு இல்லாமலே UPI பின் செட் செய்யலாம்.. எப்படி தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Published: 

13 Mar 2026 12:55 PM

 IST

தற்போதைய அவசரமான வாழ்க்கை சூழலில் வங்கிக்கு சென்று பணத்தை எடுக்கும் அளவுக்கு பொறுமை யாருக்கும் இல்லை. எங்கேனும் செல்ல வேண்டும் என்றால் கூட போகும் வழியில் ஏடிஎம்-ல் (ATM – Automated Teller Machine) பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என தான் பலரும் நினைக்கின்றனர். இவ்வாறு ஏடிஎம் மற்றும் ஏடிஎம் கார்டுகள் மனிதர்களின் வாழ்வில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. ஏடிஎம் கார்டை ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்றால் அதற்கு பின் செட் செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது. அவ்வாறு பின் செட் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஏடிஎம் கார்டு நம்பர் தேவையாக உள்ளது. ஆனால், ஏடிஎம் கார்டு நம்பர் இல்லாமலே ஏடிஎம் பின் செட் செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏடிஎம் இல்லாமல் யுபிஐ பின் செட் செய்யலாம் – எப்படி?

பேடிஎம் செயலியில் ஏடிஎம் (Paytm) கார்டு இல்லாமல் பின் நம்பர் உருவாக்குவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

  1. முதலில் உங்கள் மொபைலில் பேடிஎம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.
  2. பிறகு அதில் இடது மூலையில் உள்ள புரொஃபைல் ஐகானை (Profile Icon) கிளிக் செய்யுங்கள்.
  3. பிறகு புரொஃபைல் பகுதியை கீழே ஸ்க்ரோல் செய்து, UPI & பேமெண்ட் செட்டிங்க்ஸ் என்ற அம்சத்தை தேர்வு செய்யுங்கள்.
  4. இப்போது உங்களுக்கு உங்கள் பேடிஎம் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளின் விவரங்கள் தோன்றும்.
  5. இந்த நிலையில், நீங்கள் எந்த கணக்கிற்கு யுபிஐ பின் செட் செய்ய விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்ய வேண்டும்.
  6. கணக்கை தேர்வு செய்த பிறகு பின் செட் செய்வதற்கான பணிகளை தொடங்கலாம்.
  7. அடுத்த திரையில் யுபிஐ பின் செட் செய்ய பல்வேறு வழிகள் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் ஆதார் கார்டு என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  8. பிறகு ஆதார் எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் அதற்கு வரும் ஓடிபி என அனைத்தையும் உள்ளிட வேண்டும்.
  9. ஆதார் மற்றும் வங்கி ஓடிபி வெற்றிகரமாக சரிப்பார்க்கப்பட்ட பின் உங்களுக்கான 6 இலக்க யுபிஐ பின்னை நீங்கள் உருவாக்கலாம்.

இதையும் படிங்க : லேப்டாப், கம்ப்யூட்டரில் வைரஸ் பாதிப்பு?.. கண்டுபிடித்து சரி செய்வது எப்படி?

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றி ஏடிஎம் கார்டு இல்லாமலே யுபிஐ பின் செட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
மாணவர்கள் செய்த 'பிராங்க்'.. அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு!
மினாப் பள்ளி தாக்குதல்: அமெரிக்கா மீது சந்தேகம்
மும்பையில் எரிவாயு தட்டுப்பாடு..20% உணவகங்கள் மூடல்..
துபாயில் தவிக்கும் இந்தியர்கள்.. தனது 64 அடுக்குமாடி குடியிருப்புகளை கொடுத்து உதவிய இந்தியத் தொழிலதிபர்..