PM Kisan : பணம் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்படவில்லையா? உடனே செய்ய வேண்டியவை

PM Kisan: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ் 21வது தவணை நிதியை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில்  நடந்த இயற்கை வேளாண் மாநாட்டு பிரதமர் மோடி நிகழ்வில் வெளியிட்டார். இந்த நிலையில் சிலருக்கு இந்த தொகை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

PM Kisan : பணம் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்படவில்லையா? உடனே செய்ய வேண்டியவை

மாதிரி புகைப்படம்

Updated On: 

20 Nov 2025 16:44 PM

 IST

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM Kishan) கீழ் மத்திய அரசு 21வது தவணை நிதியை வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) 9 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ரூ.18,000 கோடிக்கு மேல் டெபாசிட் செய்துள்ளார். இதன் மூலம் ஒவ்வொரு விவசாய குடும்பமும் ஆண்டுக்கு ரூ.6000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான நிதி விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில், சில விவசாயிகளின் கணக்குகளில் மட்டும் டெபாசிட் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து நமக்கு நிவாரணம் கிடைக்குமா என சில விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. நிதி டெபாசிட் செய்யப்படாததற்கான காரணங்கள் இவையாக இருக்கலாம். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

9 கோடி விவசாயிகளுக்கு நிவாரண தொகை

நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மத்திய அரசு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. விவசாயிகள் முதலீடு செய்ய உதவும் நோக்கில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ் 21வது தவணை நிதியை பிரதமர் மோடி நவம்பர் 19, 2025 அன்று கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில்  நடந்த இயற்கை வேளாண் மாநாட்டு  நிகழ்வில் வெளியிட்டார். இதன் மூலம், சுமார் 9 கோடி தகுதியுள்ள விவசாயிகளின் கணக்குகளில் மொத்தம் ரூ.18,000 கோடிக்கு மேல் மையம் டெபாசிட் செய்துள்ளது. இது விவசாயிகளின் விவசாயத் தேவைகளுக்கு நிறைய நிவாரணம் அளிக்கும்.

இதையும் படிக்க : தங்கம் Vs வெள்ளி Vs பங்குச்சந்தை.. எதில் முதலீடு செய்வது சிறந்தது!

கடந்த பிப்ரவரி 24, 2019 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 11 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ. 6,000 நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தத் தொகை, விவசாயிகளின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் தலா ரூ. 2,000 வீதம் மூன்று தவணைகளாக நேரடியாக செலுத்தப்படும். சமீபத்தில், 20வது தவணை நிதி ஆகஸ்ட் 2,  2025 அன்று வெளியிடப்பட்டது, இப்போது 21வது தவணையும் விவசாயிகளால் பெறப்பட்டுள்ளது. இதுவரை, 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு அரசாங்கம் ரூ. 3.70 லட்சம் கோடியை விநியோகித்துள்ளது.

பணம் கிடைக்காத விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்?

சில விவசாயிகள் தகுதி பெற்றிருந்தாலும் அவர்களின் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு சில காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக KYC தகவல்களை முழுமையாக நிறைவு செய்யாதது இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

வங்கிக் கணக்கில் உள்ள விவரங்களுக்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தால், பணம் வரவு வைக்கப்படாமல் இருக்கலாம். அதனால் எல்லா விவரங்களும் சரியாக இருக்கிறதா என ஒருமுறை தெரிந்துகொள்வது நல்ல.

இதையும் படிக்க : பிஎன்பிஎல் அம்சத்தில் மறைந்திருக்கும் சிக்கல்.. என்ன என்ன தெரியுமா?

ஆதார் வங்கிக் கணக்குடன் இணைக்கப்படவில்லை என்றாலோ அல்லது IFSC குறியீடு கொடுக்கப்பட்டிருந்தாலோ பணம் வராமல் இருக்கலாம்.
எனவே, அனைத்து விவசாயிகளும் உடனடியாக தங்கள்  அளித்த விவரங்களை சரிபார்த்து, ஆதார் தங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து, KYC விவரங்களையும் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?
2,860 கி.மீ நீளமுள்ள டானூப் நதி.. 10 நாடுகள் வழியாக பாயும் ஒரே நதி..
இறந்தவர்கள் உடலில் ரத்த ஓட்டத்தை கொண்டு வந்து உறுப்பு தானம் செய்த மருத்துவர்கள்.. ஆசியாவிலேயே புதிய முயற்சி!!
கூகுளின் டிரைவர் இல்லாமல் இயங்கும் காரால் பறிபோன பூனையின் உயிர்