Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Gold Price : அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.800 குறைந்தது.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Price Reduced In Chennai | தங்கம் விலை நேற்று (நவம்பர் 11, 2025) ரூ.93,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (நவம்பர் 12, 2025) அதிரடியாக விலை குறைந்து ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.800 குறைந்தது.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Nov 2025 12:07 PM IST

சென்னை, நவம்பர் 12 : சென்னையில் இன்று (நவம்பர் 12, 2025) தங்கம் விலை (Gold Price) அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று (நவம்பர் 11, 2025) தங்கம் ரூ.93,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிராம் ரூ.11,600-க்கும், ஒரு சவரன் ரூ.92,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் உச்சத்தில் இருந்து சரிந்த தங்கம் விலை

2024 மற்றும் 2025 இவை இரண்டுமே தங்கத்திற்கு மிகவும் சாதகமான ஆண்டாக அமைந்துள்ளது. காரணம், இந்த இரண்டு ஆண்டுகளில் தங்கம் வரலாறு காணாத விலை உயர்வை அடைந்துள்ளது. குறிப்பாக 2025 அக்டோபர் வரை மட்டுமே தங்கம் சுமார் 45 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது. தங்கம்  இவ்வாறு கடும் உச்சத்தை நோக்கி சென்றுக்கொண்டே இருந்த நிலையில், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டு என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தான் அக்டோபர் 22, 2025 அன்று தங்கம் சர்வதேச அளவில் சரிவை சந்தித்தது. அதனை தொடர்ந்து தங்கம் மிக குறைவான அளவே உயர்வை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டம்.. ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

சிறிய அளவு விலை உயர்வை கண்டு வரும் தங்கம்

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
03 நவம்பர், 2025 ரூ.11,350 ரூ.90,800
04 நவம்பர், 2025 ரூ.11,250 ரூ.90,000
05 நவம்பர், 2025 ரூ.11,180 ரூ.89,440
06 நவம்பர், 2025 ரூ.11,320 ரூ.90,560
07 நவம்பர், 2025 ரூ.11,270 ரூ.90,160
08 நவம்பர், 2025 ரூ.11,300 ரூ.90,400
09 நவம்பர், 2025 ரூ.11,300 ரூ.90,400
10 நவம்பர், 2025 ரூ.11,480 ரூ.91,840
11 நவம்பர், 2025 ரூ.11,700 ரூ.93,600
12 நவம்பர், 2025 ரூ.11,600 ரூ.92,800

அக்டோபர் 22, 2025 அன்று தங்கம் விலை சர்வதேச அளவில் 6.3 சதவீதம் சரிவை சந்தித்தது. அதனை தொடர்ந்து பெரிய மாற்றங்கள் இல்லாமல் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று (நவம்பர் 11, 2025) ரூ.1,760 அதிரடியாக உயர்ந்தது.

இதையும் படிங்க : Digital Gold, E-gold வாங்கலாமா? பாதுகாப்பானதா? SEBI விடுத்த எச்சரிக்கை!!

இன்றைய தங்கம் நிலவரம்

இன்று (நவம்பர் 12, 2025) தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.11,600-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.92,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் ரூ.90,000 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.92,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.