Personal Loan : எவ்வளவு ஊதியம் இருந்தால் எவ்வளவு வங்கி கடன் கிடைக்கும்?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!
Personal Loan Eligibility | பெரும்பாலான நபர்கள் தங்களது நிதி தேவைகளுக்காக வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். பல கட்ட சோதனைகளுக்கு பிறகு வங்கி கடன் வழங்கும். இந்த நிலையில், ஒருவரின் மாத ஊதியத்தின் அடிப்படையில் அவருக்கு எவ்வளவு தொகை கடன் வழங்கப்படும் என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் எதிர்பாராத நேரங்களில் பொருளாதார நெருக்கடி, பண தேவை ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறு நிதி நெருக்கடி ஏற்படும் போது, சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்திருக்கும் நபர்கள் அவற்றின் மூலம் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வர். ஆனால், சேமிப்பு மற்றும் முதலீடு செய்யாத நபர்கள் நிதி தேவைக்காக வங்கிகளில் கடன் வாங்குவர். ஆனால், வங்கிகளில் கடன் வாங்குவது அவ்வளவு சாதாரணம் அல்ல. அதற்கு சில விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. இந்த நிலையில், வங்கிகளில் எவ்வளவு சம்பளத்திற்கு எவ்வளவு தொகை கடன் வழங்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வங்கி கடனுக்கு முக்கிய அம்சமாக உள்ள மாத ஊதியம்
வங்கி கடன்கள் பல்வேறு அம்சங்களின் கீழ் வழங்கப்படுகிறது. அதாவது வீட்டு கடன், தொழில் கடன், தனிநபர் கடன் என பல வகைகளில் கடன்களை வழங்குகிறது. இவற்றில் பெரும்பாலான நபர்கள் தங்களது நிதி தேவைகளுக்காக தனிநபர் கடன் பெறுகின்றனர். கடன்களை பொருத்தவரை வீட்டு கடன் என்றால், வீட்டு பத்திரத்தை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும்.
இதுவே தொழில் கடன் என்றால் சொத்துக்களின் அடிப்படையில் வழங்கப்படும். இந்த நிலையில், தனிமனித கடனுக்கு கடன் வாங்கும் நபரின் மாத ஊதியம் முக்கியமாக கருதப்படுகிறது. ஒருவர் மாதம் எவ்வளவு ஊதிய வாங்குகிறாரோ அதன் அடிப்படையில் தான் அவருக்கு கடனு வழங்கப்படுகிறது. அந்த வகையில் குறைந்த அளவு மாத ஊதிய பெறும் நபர்களுக்கு குறைந்த கடன் தொகையும், அதிக மாத ஊதியம் வாங்கும் நபர்களுக்கு அதிக கடனும் வழங்கப்படுகிறது.
எவ்சளவு சம்பளத்திற்கு எவ்வளவு கடன் கிடைக்கும்?
வங்கியில் தனிநபர் கடன் பெறுவதற்கு மாத வருமானம் முக்கியமாக உள்ள நிலையில், பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, எவ்வளவு சம்பளம் இருந்தால் எவ்வளவு தொகை கடன் பெற முடியும் என பார்க்கலாம்.
- ரூ.25,000 மாத ஊதியம் வாங்கினால் ரூ.5 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு உள்ளது.
- ரூ.50,000 மாத ஊதியம் வாங்கினால் ரூ.10 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு உள்ளது.
- ரூ.75,000 மாத ஊதியம் வாங்கினால் ரூ.15 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு உள்ளது.
- ரூ.1 லட்சம் மாத ஊதியம் வாங்கினால் ரூ.20 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு உள்ளது.
- ரூ.1.25 லட்சம் மாத ஊதியம் வாங்கினால் ரூ.25 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு உள்ளது.
- ரூ.1.5 லட்சம் மாத ஊதியம் வாங்கினால் ரூ.30 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு உள்ளது.
- ரூ.1.75 லட்சம் மாத ஊதியம் வாங்கினால் ரூ.35 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு உள்ளது.
- ரூ.2 லட்சம் மாத ஊதியம் வாங்கினால் ரூ.40 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு உள்ளது.
பெரும்பாலான வங்கிகள் ரூ.30 முதல் ரூ.40 லட்சம் வரை மட்டுமே அதிகபட்ச தனிநபர் கடன்களை வழங்குகின்றன. வங்கிகளை பொருத்து இந்த அளவு மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.