Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருமணங்களின் போது பெறப்படும் கிஃப்ட்களுக்கு வரி விதிக்கப்படுமா? சட்டம் என்ன சொல்கிறது?

Marriage gifts can be taxable : இந்திய திருமணங்களில் மணமக்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மொய் என்ற பெயரில் பணமாகவோ பரிசு பொருட்களாகவோ வழங்குவது வழக்கம். அப்படி வழங்கப்படும் பணத்துக்கும் பரிசு பொருட்களுக்கும் வரி விதிக்கப்படுமா என்பது அனைவரின் கேள்வி. இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருமணங்களின் போது பெறப்படும் கிஃப்ட்களுக்கு வரி விதிக்கப்படுமா? சட்டம் என்ன சொல்கிறது?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 27 May 2025 19:53 PM

திருமண (Marriage) நிகழ்ச்சிகளில் மொய் என்ற பெயரில் பணமாகவோ அல்லது பரிசுப் பொருட்களாகவோ கொடுக்கப்படுவது இந்திய கலாச்சாரத்தில் வழக்கமான ஒன்று. சில நேரங்களில் ரூ.100 அல்லது ரூ.500 என்ற அளவிலேயே மொய் அல்லது பரிசுப்பொருட்கள் அளிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் அது கணிசமான தொகை வரலாம்.  பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் 2013 தீர்ப்பின் படி, பெற்றோராக நீங்கள் உங்கள் பிள்ளையின் திருமணத்தின்போது பெறும் பரிசுகள் அனைத்தும் வரிவிலக்கு கிடையாது என்றும்அந்த பரிசுகள் வருமானமாகக் கருதி வரிவிதிக்கப்படலாம். குறிப்பாக அவை உங்கள் நெருங்கிய உறவினர்களிடமிருந்து வரவில்லையெனில் நி்ச்சயம் வரிவிதிக்கத் தக்கது என்று தீர்ப்பளித்திருந்தது.

திருமணத்தில் பெறப்படும்  கிடைக்கும் பரிசுப்பொருட்களுக்கு வரி

சண்டீகரை சேர்ந்த ராஜிந்தர் மோகன் லால் என்பவருக்கு, அவரது மகளின் திருமணத்தில் நண்பர்களும் உறவினர்களும் ரூ.21 லட்சம் பரிசாக வழங்கினர். அவர் தன்னுடைய வருமான வரி கணக்கில் இந்த தொகையை சேர்க்கவில்லை. ஆனால் வருமான வரித்துறை இந்த தொகையை வருமானமாகக் கருதி, வரிவிதித்தது. இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ராஜிந்தர், “இந்தியாவில் பெற்றோர்களுக்கு திருமணத்தில் பரிசுகள் கொடுக்கப்படுவது வழக்கம். எனவே இதற்கு எப்படி வரி விதிக்க முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் அவரது வாதத்தை மறுத்த நீதிமன்றம் திருமணத்தின்போது பெறப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வருமானமாக கருதி வரிவிதிக்கப்படும் என்று தீர்ப்பளித்தது.

சட்டம் என்ன சொல்கிறது?

வருமான வரி சட்டத்தின் பிரிவு 56(2)(x) என்பதன் கீழ், ரூ.50,000க்கும் மேற்பட்ட பரிசுகளுக்கு பொதுவாக வரி விதிக்கப்படும் என கூறுகிறது. ஆனால் சில விலக்குகள் உள்ளன. குறிப்பாக நெருங்கிய உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட பரிசுகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.  மேலும் நமது திருமணத்தின் போது நமக்கு அளிக்கப்படும் பரிசு பொருட்களுக்கு வரி விலக்கு உண்டு எனவும் நம் பெற்றோருக்கு  அளிக்கப்படும் பணமும் பரிசுப்பொருட்களுக்கு வரிவிலக்கு கிடையாது என்றும் கூறுகிறது.

திருமண பரிசுகளுக்கு வரிவிலக்கு என்பது திருமணம் செய்கிற நபருக்கு மட்டுமே கிடைக்கும். மற்றபடி பெற்றோர், உறவினர்களுக்கு கிடைக்கும் பரிசுகள் வருமானமாக கருதப்பட்டு அவற்றுக்கு வரி விதிக்கப்படும். இதுகுறித்து மேற்சொன்ன சட்டப்பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீங்கள் கவனிக்க வேண்டியவை:

இனி உங்கள் மகன், மகளின் திருமணத்தின்போது  உங்கள் பெயரில் பணமாகவோ, பொருளாகவோ அளிப்பது வருமானமாகக் கருதப்படும். குறிப்பாக ரூ.50,000க்கும் மேல் உள்ள பரிசுப்பொருட்கள் வருமானமாக கருதப்பட்டு வரி விதிக்கப்படும்.  நெருங்கிய உறவினர்களிடம் இருந்து கிடைக்கும் பட்சத்தில் அதற்கு வரிவிலக்கு உண்டு. அதே போல மணமகன் மற்றும் மணமகளுக்கு அளிக்கப்படும் பரிசுப்பொருட்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும்.

திருமணத்தின்போது அளிக்கப்படும் பரிசுகளுக்கு வரியில்லை. ஆனால் அந்த பரிசுகளில் இருந்து வரும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும்.  உதாரணமாக ஒரு அப்பா, தனது மகளுக்கு திருமண பரிசாக ரூ. 1 கோடி மதிப்புள்ள காரைக் கொடுக்கிறார். அந்த கார் பரிசாக அளிக்கப்பட்டதால் அதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால் அவரது மகள் காரை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார் என்றால் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி உண்டு.

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?...
நியாபக மறதி பிரச்னையா? இந்த ஜப்பானிய பயிற்சிகளை டிரை பண்ணுங்க!
நியாபக மறதி பிரச்னையா? இந்த ஜப்பானிய பயிற்சிகளை டிரை பண்ணுங்க!...
குழந்தைகளிடையே அதிகரிக்கும் டைப் 1 சர்க்கரை நோய்
குழந்தைகளிடையே அதிகரிக்கும் டைப் 1 சர்க்கரை நோய்...
தனுஷின் குபேரா படத்திற்கு வந்த முதல் விமர்சனம் - வைரலாகும் போஸ்ட்
தனுஷின் குபேரா படத்திற்கு வந்த முதல் விமர்சனம் - வைரலாகும் போஸ்ட்...
சோளிங்கர் அருகே வீடு புகுந்து சிறுமி கொலை - பரபரப்பு சம்பவம்
சோளிங்கர் அருகே வீடு புகுந்து சிறுமி கொலை - பரபரப்பு சம்பவம்...
பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடித்த சரண்டர் படத்தின் டீசர் இதோ!
பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடித்த சரண்டர் படத்தின் டீசர் இதோ!...
தாய்ப்பால் கொடுக்கும் போது குல்கந்து சாப்பிடலாமா?
தாய்ப்பால் கொடுக்கும் போது குல்கந்து சாப்பிடலாமா?...
2025 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகை எப்போது? - தேதி அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகை எப்போது? - தேதி அறிவிப்பு!...
ஜூன் மாதம் ஓடிடியில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி... அப்டேட் இதோ
ஜூன் மாதம் ஓடிடியில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி... அப்டேட் இதோ...
அன்பு மன்னிப்பு கேட்காது - சர்ச்சைக்கு கமல் விளக்கம்
அன்பு மன்னிப்பு கேட்காது - சர்ச்சைக்கு கமல் விளக்கம்...
ரெட்ரோ படத்தின் புதிய ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!
ரெட்ரோ படத்தின் புதிய ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!...