Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Form 16க்கும் Form 26ASக்கும் இடையே உள்ள வித்தியாசம்? Form 16ல் விடுபட்ட தகவல்களை மீண்டும் சேர்க்க முடியுமா?

Difference between Form 16 and 26AS : பணியாளர்கள் வருகிற ஜூலை 31, 2025 அன்று வருமான வரிதாக்கல் செய்ய வேண்டும். இந்த நிலையில் ஃபார்ம் 16ல் தகவல் விடுபட்டிருந்தால் வருமான வரி தாக்கல் செய்யும்போது சிக்கல் ஏற்படலாம். இந்த நிலையில் ஃபார்ம் 16ல் தவறுகள் இருந்தால் மாற்ற இயலுமா என்பது குறித்து பார்க்கலாம்.

Form 16க்கும் Form 26ASக்கும் இடையே உள்ள வித்தியாசம்? Form 16ல் விடுபட்ட தகவல்களை மீண்டும் சேர்க்க முடியுமா?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 27 May 2025 16:22 PM

பணியாளர்கள் ஜூலை 31 2025 அன்று ஃபார்ம் 16 (Form 16) ஐ  தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். எனவே, அதற்குள் அதில் ஏதேனும் தவறுகள் இருக்கிறதா என ஒருமுறை சரி பார்த்துக்கொள்வது நல்லது. ஃபார்ம் 16 என்பது பணியாளர்களின் ஊதியத்திலிருந்து எடுக்கப்படும் வரிக்கு உரிய சான்று ஆகும். இது பணியாளர் பெற்ற வருமானம், பிடிக்கப்பட்ட தொகை மற்றும் செலுத்தப்பட்ட வரிகள் ஆகியவை குறித்து விரிவாக இடம் பெற்றிருக்கும். பிஸ்னஸ் ஸ்டேணட்ர்டில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் மும்பையைச் சேர்ந்த சார்ட்டட் அக்கவுண்டட் சுரேஷ் சுரணா தெரிவித்ததாவது, “ஃபார்ம் 16 என்பது ஊதியத்திலிருந்து பிடிக்கப்படும் வரி (TDS) குறித்த முக்கியமான சான்று. இது பணியாளர்களுக்கு வரி தாக்கல் செய்யும் முறையை எளிதாக்குகிறது” எனத் தெரிவித்தார்.

Form 16 மற்றும் Form 26AS – இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்

ஃபார்ம் 16 உங்கள் நிறுவனத்தால் வழங்கப்படும் சான்று. ஆனால் ஃபார்ம் 26ஏஎஸ் என்பது உங்கள் பான் எண்ணுடன் இணைக்கப்பட்ட வருமான வரி தகவல்களின் முழுமையான பதிவு ஆகும். இது வருமான வரித்துறையின் இணையதளத்தில் கிடைக்கும். இதில், நாம் பெறும் சம்பள விவரங்கள்,  பிற வருமானங்கள், வரி விலக்கு விவரம் (Tax Deducted at Source),  வரி பிடிக்கப்பட்ட விவரம் (Tax Collected Service) மற்றும் முன் செலுத்திய வரிகள் போன்ற விவரங்கள் இருக்கும். ஃபார்ம் 16 மற்றும் ஃபார்ம் 26ஏஎஸ் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தால், டிடிஎஸில் ஏதேனும் தவறு இருந்தால் தெரிந்துவிடும்.

ஃபார்ம் 16 மற்றும் ஃபார்ம் 26ஏஎஸ்-ல் உள்ள தகவல்களில் வேறுபாடு இருந்தால், உடனடியாக உங்கள் நிறுவனத்தின் எச்ஆர் (HR) அல்லது வருமான வரி அலுவலகத்தில் தெரிவித்து தவறுகளை சரி செய்ய முயல வேண்டும். காரணம் டிடிஎஸில் தவறுகள் திருத்தப்படாமல் இருந்தால், வருமான வரி தாக்கல் செய்யும் போது பிரச்னை ஏற்படலாம்.

ஃபார்ம் 16ல் விடுபட்ட தகவல்களை மாற்ற முடியுமா?

சில நேரங்களில் நீங்கள் உங்கள் வரி கழிவுகளுக்கான ஆதாரங்களை நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றால், அவை ஃபார்ம் 16-இல் இடம்பெறாமல் போகலாம். ஆனால் அதனை வருமான வரி தாக்கலின் போது இந்த தவறவிட்ட வரி கழிவாக சேர்த்து தாக்கல் செய்யலாம். ஃபார்ம் 16 என்பது மிகவும் பயனுள்ள ஆவணம். ஆனால் இது மட்டுமே வருமான வரி தாக்கல் செய்வதற்கு போதுமானது அல்ல. நீங்கள் ஃபார்ம் 26ஏஎஸ் மற்றும் பிற வருமான விவரங்களையும் கவனமாக சரிபார்க்க வேண்டியிருக்கும்.  வருமான வரிதாக்கல் செய்வதற்கு முன் ஃபார்ம் 16, ஃபார்ம 26ஏஎஸ்ஆகியவற்றை ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். வேறுபாடுகள் இருந்தால் உடனே நம் நிறுவனத்தின் எச்ஆர் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.  ஃபார்ம் 16-இல் இல்லாத விவரங்களை வருமான வரி தாக்கல் செய்யும்போது சேர்த்துக்கொள்ளலாம்.

கொரோனாவின் இந்த மோசமான அறிகுறிகள் தற்போது இல்லை - காரணம் என்ன?
கொரோனாவின் இந்த மோசமான அறிகுறிகள் தற்போது இல்லை - காரணம் என்ன?...
இந்த வாரம் தியேட்டரை விட ஓடிடிதான் மாஸ்... யார் படம் பார்க்க போறீ
இந்த வாரம் தியேட்டரை விட ஓடிடிதான் மாஸ்... யார் படம் பார்க்க போறீ...
20 விநாடிகளில் முழு உடல் பரிசோதனை: வியப்பில் ஆழ்த்தும் ஏஐ கருவி
20 விநாடிகளில் முழு உடல் பரிசோதனை: வியப்பில் ஆழ்த்தும் ஏஐ கருவி...
போக்குவரத்து ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு - தமிழ்நாடு அரசு
போக்குவரத்து ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு - தமிழ்நாடு அரசு...
தென்காசி திருமலை குமாரசாமி கோவிலில் மோகன்லால் வேல் காணிக்கை!
தென்காசி திருமலை குமாரசாமி கோவிலில் மோகன்லால் வேல் காணிக்கை!...
கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடிக்கும் படத்தில் டைட்டில் வீடியோ இதோ
கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் நடிக்கும் படத்தில் டைட்டில் வீடியோ இதோ...
இறுதிப்போட்டியில் இடம்பிடித்த பெங்களூரு.. பஞ்சாப் பரிதாப தோல்வி!
இறுதிப்போட்டியில் இடம்பிடித்த பெங்களூரு.. பஞ்சாப் பரிதாப தோல்வி!...
100 மீ தடை ஓட்டம்.. தடையை உடைத்து தங்கத்தை தூக்கிய ஜோதி யாராஜி!
100 மீ தடை ஓட்டம்.. தடையை உடைத்து தங்கத்தை தூக்கிய ஜோதி யாராஜி!...
மே 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
மே 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன?...
மொழி சர்ச்சை : கமலுக்கு ஆதரவாக பதிவிட்ட நடிகை திவ்யா!
மொழி சர்ச்சை : கமலுக்கு ஆதரவாக பதிவிட்ட நடிகை திவ்யா!...
சாய் சுதர்சனுக்கு பேட்டிங் நுட்பம் இல்லையா? பயிற்சியாளர் பகீர்!
சாய் சுதர்சனுக்கு பேட்டிங் நுட்பம் இல்லையா? பயிற்சியாளர் பகீர்!...