இனி ரூ.20 லட்சம் வரையிலான சொத்து பதிவுக்கு பான் கட்டாயமில்லை.. ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் புதிய விதி!
New Update On PAN Card Use In Registration | இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கு மேல் சொத்து பதிவு செய்யும் நபர்கள் கட்டாயம் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்த நிலையில், இனி ரூ.20 லட்சம் வரையிலான சொத்து பதிவுக்கு பான் கார்டு கட்டாயமில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாதிரி புகைப்படம்
சொத்து வாங்கும்போது பத்திரப்பதிவின்போது குறிப்பிட்ட தொகைக்கு மேல் இருந்தால் பான் கார்டு (PAN Card) சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், தற்போது பான் கார்டு சமர்ப்பிப்பதற்கான அளவு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இனி ரூ.20 லட்சம் வரையிலான சொத்து பதிவுக்கு பான் கார்டு கட்டாயம் இல்லை என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், பான் கார்டு குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இனி இந்த அளவு வரையிலான பத்திரப்பதிவுக்கு பான் அவசியமில்லை
இந்தியாவில் சொத்து வாங்கும் நபர்கள் அதற்கான பத்திரப்பதிவின்போது பான் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஒருவேளை சொத்து வாங்கும் நபரிடம் பான் கார்டு இல்லை என்றால், அதற்கு உரிய ஒரு தனி படிவத்தில் உறுதொமொழி அளிக்க வேண்டும். அந்த வகையில், தற்போது ரூ.10 லட்சத்திற்கு மேல் சொத்து வாங்கும் நபர்கள் கட்டாயம் தங்களது பான் கார்டு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது.
இதையும் படிங்க : ஒருவேளை உணவை மிச்சப்படுத்தியாவது வெள்ளி வாங்குங்கள்.. ராபர்ட் கியோசாகி வழங்கும் முக்கிய அறிவுரை!
ரூ.20 லட்சம் வரையிலான சொத்து பதிவுகளுக்கு பான் கட்டாயமில்லை
இந்த நிலையில் தான் வருமான வரி சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி, பான் அளிப்பதற்கான வரம்புகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது இனி ரூ.20 லட்சம் வரை மதிப்பிலான சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய பான் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், இனி ரூ.20 லட்சத்திற்கு மேல் சொத்துக்களை வாங்கினால் மட்டுமே பான் எண் சமர்ப்பித்தால் போதுமானது என்ற நிலை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க : வீட்டு உரிமையாளர்களே இதெற்கெல்லாம் No.. 2026 ஆம் ஆண்டுக்கான புதிய வாடகை விதிகள் கூறுவது என்ன?
சொத்து வாங்குவது, விற்பனை செய்வது, பரிசாக கொடுப்பது, கூட்டாக மேம்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளுக்கு இந்த விலக்கு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.